《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
26 : 53

وَكَمْ مِّنْ مَّلَكٍ فِی السَّمٰوٰتِ لَا تُغْنِیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا اِلَّا مِنْ بَعْدِ اَنْ یَّاْذَنَ اللّٰهُ لِمَنْ یَّشَآءُ وَیَرْضٰی ۟

53.26. வானங்களிலுள்ள எத்தனையோ வானவர்களின் பரிந்துரை எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் யாருக்கேனும் பரிந்துரை செய்ய விரும்பினால் அல்லாஹ்வின் அனுமதிக்குப் பிறகே அதுவும் அவர்களில் அவன் நாடியவர்களுக்கே பரிந்துரை செய்ய முடியும். பரிந்துரை செய்பவரையும் பொருந்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தனக்கு இணைகளாக ஏற்படுத்தப்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதிக்க மாட்டான். அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்ற பரிந்துரைசெய்யப்படும் எவரையும் பொருந்திக்கொள்ள மாட்டான். info
التفاسير:
这业中每段经文的优越:
• كمال أدب النبي صلى الله عليه وسلم حيث لم يَزغْ بصره وهو في السماء السابعة.
1. நபியவர்களின் பரிபூரண ஒழுக்கம். எனவேதான் ஏழாம் வானத்திலும் அவரது பார்வை திரும்பவில்லை. info

• سفاهة عقل المشركين حيث عبدوا شيئًا لا يضر ولا ينفع، ونسبوا لله ما يكرهون واصطفوا لهم ما يحبون.
2.இணைவபை்பாளர்களின் மடமையான சிந்தனை. தீங்கிழைக்கவோ, பிரயோசனம்தரவோ முடியாதவற்றை வணங்கினார்கள். தாம் வெறுப்பவற்றை அல்லாஹ்வுக்கு இணைத்துக்கூறியும் தாம் விரும்புபவற்றைத் தமக்கு தேர்ந்தெடுத்தனர். info

• الشفاعة لا تقع إلا بشرطين: الإذن للشافع، والرضا عن المشفوع له.
3. பரிந்துரை செய்வதற்கான இரு நிபந்தனைகள்: 1. பரிந்துரை செய்பவருக்கான அனுமதி. 2. பரிந்துரை செய்யப்படுபவரைக் குறித்து திருப்தியடைதல். info