《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

页码:close

external-link copy
36 : 50

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِی الْبِلَادِ ؕ— هَلْ مِنْ مَّحِیْصٍ ۟

50.36. மக்காவின் இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்களுக்கு முன்னர் நாம் அவர்களை விட வலிமைமிக்க எத்தனையோ சமூகங்களை அழித்துள்ளோம். அவர்கள் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக ஏதாவது வழியுள்ளதா என பல நாடுகளில் சுற்றித் திரிந்தார்கள். ஆயினும் அவர்களால் தப்பிப்பதற்கான இடத்தை பெற முடியவில்லை.
info
التفاسير:

external-link copy
37 : 50

اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَی السَّمْعَ وَهُوَ شَهِیْدٌ ۟

50.37. நிச்சயமாக நாம் மேற்கூறிய முந்தைய சமூகங்களை அழித்ததிலே விளங்கிக் கொள்ளும் உள்ளத்திற்கு அல்லது கவனயீனமின்றி உளப்பூர்வமாக காதுதாழ்த்தி செவியேற்போருக்கு நினைவூட்டலும் அறிவுரையும் இருக்கின்றது. info
التفاسير:

external-link copy
38 : 50

وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ۖۗ— وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ ۟

50.38. நாம் வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம். நாம் அவற்றை ஒரு விநாடியில் படைப்பதற்கும் சக்தி பெற்றவர்களாவோம். யூதர்கள் கூறுவதுபோல நமக்கு அதனால் எந்தக் களைப்பும் ஏற்படவில்லை. info
التفاسير:

external-link copy
39 : 50

فَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ ۟ۚ

50.39. -தூதரே!- யூதர்களும் ஏனையோரும் கூறுவதை சகித்துக் கொள்வீராக. உம் இறைவனைப் புகழ்ந்தவாறு சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலைத் தொழுகையையும் அது மறைவதற்கு முன்னர்அஸர் தொழுகையையும் தொழுவீராக. info
التفاسير:

external-link copy
40 : 50

وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ ۟

50.40. இரவு நேரங்களிலும் அவனுக்காகத் தொழுவீராக. தொழுகைகளுக்குப்பிறகு அவனை துதி பாடுவீராக. info
التفاسير:

external-link copy
41 : 50

وَاسْتَمِعْ یَوْمَ یُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ

50.41. -தூதரே!- இரண்டாது முறை சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வானவர் நெருங்கிய இடத்திலிருந்து அழைக்கும் நாளை காதுகொடுத்துக் கேட்பீராக. info
التفاسير:

external-link copy
42 : 50

یَّوْمَ یَسْمَعُوْنَ الصَّیْحَةَ بِالْحَقِّ ؕ— ذٰلِكَ یَوْمُ الْخُرُوْجِ ۟

50.42. அந்த நாளில்தான் படைப்பினங்கள் மீண்டும் எழுப்புவதற்கான ஓசையை சந்தேகமின்றி உண்மையாகவே செவிமடுக்கும். அதனைச் செவியுறும் அந்த நாள்தான் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் இறந்தவர்கள் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்படும் நாளாகும். info
التفاسير:

external-link copy
43 : 50

اِنَّا نَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَاِلَیْنَا الْمَصِیْرُ ۟ۙ

50.43. நிச்சயமாக நாமே உயிர்ப்பிக்கின்றோம், மரணமடையச் செய்கின்றோம். நம்மைத்தவிர வேறு யாரும் உயிர்ப்பிக்கச் செய்யவோ மரணமடையச் செய்யவோ முடியாது. மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவதற்காவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் அடியார்கள் நம் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். info
التفاسير:

external-link copy
44 : 50

یَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا ؕ— ذٰلِكَ حَشْرٌ عَلَیْنَا یَسِیْرٌ ۟

50.44. பூமி பிளந்துவிடும் நாளில் அவர்கள் விரைவாக வெளிப்படுவார்கள். இவ்வாறு ஒன்றுதிரட்டுவது நமக்கு எளிதானது. info
التفاسير:

external-link copy
45 : 50

نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِجَبَّارٍ ۫— فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ یَّخَافُ وَعِیْدِ ۟۠

50.45. இந்த பொய்ப்பிப்பாளர்கள் கூறுவதை நாம் அறிவோம். -தூதரே!- நம்பிக்கைகொள்ளும்படி நீர் அவர்களை நிர்ப்பந்திப்பவர் அல்ல. நீர் அல்லாஹ் உமக்கு இட்ட கட்டளைகளைகளை எடுத்துரைப்பவர் மட்டுமே. என் எச்சரிக்கையை அஞ்சக்கூடியவர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக. ஏனெனில் நிச்சயமாக அஞ்சக்கூடியவர்தாம் ஞாபகமூட்டப்பட்டால் அறிவுரை பெறுவார். info
التفاسير:
这业中每段经文的优越:
• الاعتبار بوقائع التاريخ من شأن ذوي القلوب الواعية.
1. வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு படிப்பினை பெறுவது விழிப்பான உள்ளமுடையோரின் பண்பாகும். info

• خلق الله الكون في ستة أيام لِحِكَم يعلمها الله، لعل منها بيان سُنَّة التدرج.
2. தான் அறிந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் பிரபஞ்சத்தை ஆறு நாட்களில் படைத்தான். படிப்படியாக செய்யும் வழிமுறைளைத் தெளிவுபடுத்துவதும் அவற்றில் ஒன்றாக இருக்கலாம். info

• سوء أدب اليهود في وصفهم الله تعالى بالتعب بعد خلقه السماوات والأرض، وهذا كفر بالله.
3. வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபிறகு அல்லாஹ் களைப்படைந்துவிட்டான் என்று வர்ணித்த யூதர்களின் ஒழுக்கமின்மை. இது அல்லாஹ்வை நிராகரிப்பதாகும். info