《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
12 : 46

وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ— وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنْذِرَ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ— وَبُشْرٰی لِلْمُحْسِنِیْنَ ۟

46.12. இந்த குர்ஆனுக்கு முன்னர் அல்லாஹ் மூஸாவின் மீது இறக்கிய வேதமான தவ்ராத் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் நம்பிக்கைகொண்டு இஸ்ராயீலின் மக்களில் அதனைப் பின்பற்றியவர்களுக்கு அருட்கொடையாகவும் இருந்தது. முஹம்மது மீது இறக்கப்பட்ட அரபி மொழியிலான இந்த குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களை எச்சரிக்கை செய்யக்கூடியதாகவும் படைப்பாளனுடனும் அவனுடைய படைப்புகளுடனும் நல்ல முறையில் தொடர்பு வைத்துக்கொண்டவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது. info
التفاسير:
这业中每段经文的优越:
• كل من عُبِد من دون الله ينكر على من عبده من الكافرين.
1. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் தங்களை வணங்கிய நிராகரிப்பாளர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும். info

• عدم معرفة النبي صلى الله عليه وسلم بالغيب إلا ما أطلعه الله عليه منه.
2. அல்லாஹ் தன்னிடமிருந்து அறிவித்ததைத் தவிர நபியவர்களுக்கு மறைவான விஷயங்கள் எதுவும் தெரியாது. info

• وجود ما يثبت نبوّة نبينا صلى الله عليه وسلم في الكتب السابقة.
3. முன்னைய வேதங்களில் முஹம்மது ஸல் அவர்களின் நபித்துவத்தை நிரூபிக்கும் தகவல்கள் உள்ளன. info

• بيان فضل الاستقامة وجزاء أصحابها.
4. உறுதியாக இருப்பதன் சிறப்பும் உறுதியாளர்களுக்கான கூலியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. info