《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
21 : 40

اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ؕ— كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ— وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟

40.21. இந்த இணைவைப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை பார்க்க வேண்டாமா? அவர்களின் முடிவு மோசமானதாக இருந்தது. அந்த சமூகங்கள் இவர்களைவிட பலம்மிக்கவையாகவும் பூமியில் கட்டடங்களைக்கொண்டு அடையாளங்களை விட்டுச் சென்றவையாகவும் இருந்தன. இவர்களோ எந்த ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவர்களை தடுக்கும் எவரும் இருக்கவில்லை. info
التفاسير:
这业中每段经文的优越:
• التذكير بيوم القيامة من أعظم الروادع عن المعاصي.
1. மறுமை நாளை ஞாபகமூட்டுவது பாவங்களை விட்டும் தடுக்கும் மிகப்பெரும் எச்சரிக்கையாகும். info

• إحاطة علم الله بأعمال عباده؛ خَفِيَّة كانت أم ظاهرة.
2. தன் அடியார்களின் செயல்கள் வெளிப்படையாக இருந்தாலும் மறைமுகமாக இருந்தாலும் அல்லாஹ்வின் அறிவு அவற்றைச் சூழ்ந்துள்ளது. info

• الأمر بالسير في الأرض للاتعاظ بحال المشركين الذين أهلكوا.
3.அழிக்கப்பட்ட இணைவைப்பாளர்களின் முடிவைக் கொண்டு படிப்பினை பெறுவதற்காக பூமியில் பிரயாணம் செய்யுமாறு கட்டளையிடல். info