《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
89 : 4

وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِیَآءَ حَتّٰی یُهَاجِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ— فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ ۪— وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۙ

4.89. நயவஞ்சகர்கள் நிராகரித்ததுபோல நீங்கள் உங்களுக்கு இறக்கப்பட்டதை நிராகரித்து நீங்களும் அவர்களும் நிராகரிப்பில் சமமாகிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கைகொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் இணைவைப்பு நாட்டிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு புலம்பெயரும்வரை அவர்களை அவர்களின் விரோதத்தினால் நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் இதனைப் புறக்கணித்து தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நீடித்தால் அவர்களைக் கண்ட இடத்தில் பிடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளர்களாகவோ உங்களின் எதிரிகளுக்கு எதிராக உதவும் உதவியாளர்களாகவோ அவர்களை ஆக்கிவிடாதீர்கள். info
التفاسير:
这业中每段经文的优越:
• خفاء حال بعض المنافقين أوقع الخلاف بين المؤمنين في حكم التعامل معهم.
1.சில நயவஞ்சகர்களின் நிலை தெளிவற்றதாக இருந்ததனால் முஃமின்களுக்கு மத்தியில் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. info

• بيان كيفية التعامل مع المنافقين بحسب أحوالهم ومقتضى المصلحة معهم.
2. நயவஞ்சகர்களின் நிலமைகளைக் கவனத்திற்கொண்டு நலவுகள் ஏற்படும் விதத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விஷயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• عدل الإسلام في الكف عمَّن لم تقع منه أذية متعدية من المنافقين.
3. நயவஞ்சகர்களில் தீங்கிழைக்காதவர்களை விட்டும் தவிர்ந்திருக்குமாறு இஸ்லாம் கூறுவதில் இருந்து அதன் நீதி தௌிவாகின்றது. info

• يكشف الجهاد في سبيل الله أهل النفاق بسبب تخلفهم عنه وتكلُّف أعذارهم.
4. அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் புனிதப் போர் நயவஞ்சகர்களை இனம்காட்டும். அவர்கள் போரைவிட்டுப் பின்தங்கிவிடுவார்கள்; வீணான சாக்குப்போக்குகளைக் கூறுவார்கள். info