《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
135 : 4

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰۤی اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ ۚ— اِنْ یَّكُنْ غَنِیًّا اَوْ فَقِیْرًا فَاللّٰهُ اَوْلٰی بِهِمَا ۫— فَلَا تَتَّبِعُوا الْهَوٰۤی اَنْ تَعْدِلُوْا ۚ— وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟

4.135. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! எல்லா சூழ்நிலைகளிலும் நீதியை நிலைநாட்டி,அனைவருக்கும் உண்மையான சாட்சி சொல்லக்கூடியவர்களாக இருங்கள். அது உங்களுக்கோ உங்களின் தாய்தந்தையருக்கோ உறவினருக்கோ எதிராக உண்மையை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரியே. ஒருவரின் ஏழ்மையோ செல்வமோ சாட்சியளிக்கவோ அதனை விட்டுவிடவோ உங்களைத் தூண்டிவிட வேண்டாம். உங்களை விட அல்லாஹ்வே ஏழைக்கும் செல்வந்தனுக்கும் நெருக்கமானவன். அவர்கள் இருவரின் நலன்களையும் அவனே நன்கறிந்தவன். சாட்சி கூறும்போது உங்களின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவ்வாறு செய்தால் சத்தியத்தைவிட்டும் பிறழ்ந்துவிடுவீர். நீங்கள் உரிய முறைப்படி சாட்சிகூறாது அதனைத் திரிபுபடுத்தினால் அல்லது சாட்சிகூறாமல் நீங்கள் புறக்கணித்துவிட்டால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். info
التفاسير:
这业中每段经文的优越:
• وجوب العدل في القضاء بين الناس وعند أداء الشهادة، حتى لو كان الحق على النفس أو على أحد من القرابة.
1. மக்களிடையே தீர்ப்பளிக்கும்போதும் சாட்சி சொல்லும்போதும் நீதியுடன் செயல்பட வேண்டும். அது தனக்கு எதிராகவோ தன் நெருங்கிய உறவினருக்கு எதிராகவோ இருந்தாலும் சரியே. info

• على المؤمن أن يجتهد في فعل ما يزيد إيمانه من أعمال القلوب والجوارح، ويثبته في قلبه.
2. நம்பிக்கையாளன் தன் ஈமானை அதிகப்படுத்தி உள்ளத்தில் அதனை உறுதிப்படுத்தும் உள, உடல் ரீதியான செயல்களில் ஈடுபடுவதற்கு முழுமுயற்சி செய்ய வேண்டும். info

• عظم خطر المنافقين على الإسلام وأهله؛ ولهذا فقد توعدهم الله بأشد العقوبة في الآخرة.
3. நயவஞ்சகர்கள் மூலமாக இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாரிய ஆபத்துண்டு. எனவேதான் அவர்களுக்கு மறுமையில் கடுமையான வேதனை உண்டு என எச்சரிக்கப்பட்டுள்ளது. info

• إذا لم يستطع المؤمن الإنكار على من يتطاول على آيات الله وشرعه، فلا يجوز له الجلوس معه على هذه الحال.
4. அல்லாஹ்வின் வசனங்களுக்கும் அவனுடைய மார்க்கத்திற்கும் எதிராக பேசப்படுவோருக்கு மறுப்புத்தெரிவிக்கச் சக்தியற்ற ஒரு நம்பிக்கையாளன், அதேநிலையில் அவர்களுடன் அமர்ந்திருக்கக்கூடாது. info