《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
3 : 39

اَلَا لِلّٰهِ الدِّیْنُ الْخَالِصُ ؕ— وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۘ— مَا نَعْبُدُهُمْ اِلَّا لِیُقَرِّبُوْنَاۤ اِلَی اللّٰهِ زُلْفٰی ؕ— اِنَّ اللّٰهَ یَحْكُمُ بَیْنَهُمْ فِیْ مَا هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ؕ۬— اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ ۟

39.3. இணைவைப்பை விட்டும் நீங்கிய தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வை விடுத்து சிலைகளையும் ஷைத்தான்களையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டு அவர்களை வணங்குவோர், தாம் அவர்களை வணங்குவதை நியாயப்படுத்த இவ்வாறு கூறுகிறார்கள்: “அந்தஸ்த்தால் எங்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைக்க வேண்டும், எங்களின் தேவைகளை அவனிடம் கொண்டுசெல்ல வேண்டும், அவனிடம் எங்களுக்காக பரிந்துபேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவர்களை வணங்குகின்றோம்.” நிச்சயமாக அல்லாஹ் அவனை மட்டுமே வணங்கும் நம்பிக்கையாளர்களுக்கும் அவனை நிராகரிக்கும் இணைவைப்பாளர்களுக்குமிடையே அவர்கள் முரண்பட்டுள்ள ஏகத்துவத்தின் விடயத்தில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அல்லாஹ்வுக்கு இணையிருப்பதாக அவன் மீது பொய் கூறுவோருக்கும் அல்லாஹ் அவர்கள் மீது அருட்கொடைகளை மறுப்போருக்கும் அவன் சத்தியத்தின்பால் வழிகாட்ட அருள்புரிய மாட்டான். info
التفاسير:
这业中每段经文的优越:
• الداعي إلى الله يحتسب الأجر من عنده، لا يريد من الناس أجرًا على ما يدعوهم إليه من الحق.
1. அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளர் அல்லாஹ்விடமே கூலியை எதிர்பார்க்கிறார். சத்தியத்தின் பக்கம் அழைப்பதற்கு அவர் மக்களிடம் கூலியை எதிர்பார்க்கமாட்டார். info

• التكلّف ليس من الدِّين.
2. வலிந்து செயற்படுவது மார்க்கத்தில் உள்ளதல்ல. info

• التوسل إلى الله يكون بأسمائه وصفاته وبالإيمان وبالعمل الصالح لا غير.
3. அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் நற்செயல்களைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கலாம். ஏனையவற்றைக் கொண்டல்ல. info