《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

பாதிர்

每章的意义:
بيان فقر العباد المطلق إلى فاطر السماوات والأرض، وكمال غناه عنهم.
வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் அடியார்கள் முழுமையான தேவையுடையவர்கள் என்பதையும் அவன் அவர்களை விட்டும் முழுமையாகத் தேவையற்றவன் என்பதையும் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 35

اَلْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓىِٕكَةِ رُسُلًا اُولِیْۤ اَجْنِحَةٍ مَّثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ— یَزِیْدُ فِی الْخَلْقِ مَا یَشَآءُ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

35.1. வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் தான் விதித்த கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக வானவர்களை தூதுவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களில் சிலர் நபிமார்களுக்கு வஹியை - இறைச்செய்தியை- கொண்டு சேர்க்கிறார்கள். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ் அவர்களை ஆற்றல்மிக்கவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களில் சிலர் இரண்டு இறக்கைகள், மூன்று இறக்கைகள், நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றார்கள். அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் அவற்றினால் பறந்து செல்கின்றார்கள். அல்லாஹ் படைப்பில் தான் நாடிய உறுப்பை அல்லது அழகை அல்லது குரலை அதிகப்படுத்துகிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு இயலாததல்ல. info
التفاسير:

external-link copy
2 : 35

مَا یَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚ— وَمَا یُمْسِكْ ۙ— فَلَا مُرْسِلَ لَهٗ مِنْ بَعْدِهٖ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

35.2. நிச்சயமாக ஒவ்வொரு பொருளின் திறவுகோலும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அவன் மனிதர்களுக்கு அளிக்கும் வாழ்வாதாரம், வழிகாட்டுதல், நற்பாக்கியம், அவையல்லாத இன்னும் அருட்கொடைகளை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அதற்குப்பிறகு யாராலும் கொண்டு வர முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், தன் நிர்வாகத்தில் அவன் ஞானம் மிக்கவன்.
info
التفاسير:

external-link copy
3 : 35

یٰۤاَیُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ ؕ— هَلْ مِنْ خَالِقٍ غَیْرُ اللّٰهِ یَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؗ— فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟

35.3. மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை உள்ளத்தாலும் நாவாலும் உறுப்புக்களின் செயல்களாலும் நினைவுகூருங்கள். மழையை இறக்குவதன் மூலம் வானிலிருந்தும், தாவரங்கள், பயிர்கள் இன்னும் பலவற்றை முளைக்கச் செய்வதன் மூலம் பூமியிலிருந்தும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வாழ்வாதாரம் அளித்துக்கொண்டிருக்க, எவ்வாறு இந்த உண்மையை விட்டும் நீங்கள் திசைதிருப்பப்பட்டு, அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என்று கூறுவீர்கள்?
info
التفاسير:
这业中每段经文的优越:
• مشهد فزع الكفار يوم القيامة مشهد عظيم.
1. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் பதற்றத்திற்கு உள்ளாகும் காட்சி மகத்தான காட்சியாகும். info

• محل نفع الإيمان في الدنيا؛ لأنها هي دار العمل.
2. ஈமான் பயனளிக்கும் இடம் உலகமாகும். ஏனெனில் நிச்சயமாக அதுவே செயல்படும் களமாகும். info

• عظم خلق الملائكة يدل على عظمة خالقهم سبحانه.
3. வானவர்களை பிரமாண்டமாக படைத்திருப்பது அவர்களைப் படைத்த படைப்பாளனின் மகத்துவத்தைக் காட்டுகிறது. info