《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
12 : 32

وَلَوْ تَرٰۤی اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ ؕ— رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا اِنَّا مُوْقِنُوْنَ ۟

32.12. பின்பு மறுமை நாளில் குற்றவாளிகள் மறுமையை நிராகரித்ததனால் இழிவடைந்தவர்களாக தங்களின் தலைகளைத் தாழ்த்தியவர்களாக காணப்படுவார்கள். அவர்கள் தாங்கள் இழிவடைந்துவிட்டதாக உணந்து, கூறுவார்கள்: “நாங்கள் மறுத்துக் கொண்டிருந்த மறுமை நாளை கண்டு கொண்டோம். உன்னிடமிருந்து வந்த தூதர்கள் கூறியதன் உண்மையே என்பதையும் செவியேற்றோம். எனவே நாங்கள் உனக்கு விருப்பமான நற்செயல்கள் புரிவதற்கு மீண்டும் எங்களை உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்புவாயாக. நிச்சயமாக தற்போது மறுமை நாளையும் தூதர்கள் கொண்டு வந்ததையும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” நீர் குற்றவாளிகளை இந்த நிலையில் கண்டால் மிகப் பெரும் விஷயத்தைக் கண்டவராவீர். info
التفاسير:
这业中每段经文的优越:
• إيمان الكفار يوم القيامة لا ينفعهم؛ لأنها دار جزاء لا دار عمل.
1. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கைகொள்வதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஏனெனில் அது கூலி கொடுக்கப்படும் இடமே அன்றி செயல்படும் களம் அல்ல. info

• خطر الغفلة عن لقاء الله يوم القيامة.
2. மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திப்பதைவிட்டும் அலட்சியமாக இருப்பதால் ஏற்படும் விபரீதம். info

• مِن هدي المؤمنين قيام الليل.
3. இரவில் நின்று வணங்குவது நம்பிக்கையாளர்களின் வழிகாட்டலில் உள்ளதாகும். info