《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
6 : 3

هُوَ الَّذِیْ یُصَوِّرُكُمْ فِی الْاَرْحَامِ كَیْفَ یَشَآءُ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

3.6. அவனே உங்கள் அன்னையரின் வயிற்றில் தான் நாடியவாறு ஆணாகவோ பெண்ணாகவோ, அழகாகவோ அசிங்கமாகவோ, வெள்ளையாகவோ கருப்பாகவோ பல தோற்றங்களிலும் உங்களை வடிவமைக்கிறான். அவனைத்தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. படைப்புகள் விஷயத்தில் தான் வழங்கும் சட்டங்களில், கட்டளைகளில் அவன் ஞானம்மிக்கவன். info
التفاسير:
这业中每段经文的优越:
• أقام الله الحجة وقطع العذر عن الخلق بإرسال الرسل وإنزال الكتب التي تهدي للحق وتحذر من الباطل.
1. மக்களுக்கு நேர்வழிகாட்டி அசத்தியத்தை விட்டும் அவர்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்பி, வேதங்களையும் இறக்கி ஆதாரத்தை நிலைநாட்டிவிட்டான். எனவே படைப்புகளில் யாரும் சாக்குப்போக்குக் கூற முடியாது. info

• كمال علم الله تعالى وإحاطته بخلقه، فلا يغيب عنه شيء في الأرض ولا في السماء، سواء كان ظاهرًا أو خفيًّا.
உ2. அல்லாஹ்வின் அறிவு பரிபூரணமானது, அவன் தன் படைப்புகளைக் குறித்து முழுமையாக அறிந்தவன். வானத்திலும் பூமியிலும் வெளிரங்கமான மறைவான எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info

• من أصول أهل الإيمان الراسخين في العلم أن يفسروا ما تشابه من الآيات بما أُحْكِم منها.
3. ஆழ்ந்த அறிவுள்ள விசுவாசிகள் தெளிவான வசனங்களைக் கொண்டு கருத்து மயக்கமுள்ள வசனங்களுக்கு விளக்கமளிப்பார்கள். info

• مشروعية دعاء الله تعالى وسؤاله الثبات على الحق، والرشد في الأمر، ولا سيما عند الفتن والأهواء.
4. நேர்வழியில் நிலைத்திருப்பதையும், காரியத்தில் தெளிவையும் அல்லாஹ்விடம் கேட்கவேண்டும், குறிப்பாக குழப்பங்களும் மனோ இச்சைகளும் மேலோங்கும் காலகட்டத்தில். info