《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
176 : 3

وَلَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ ۚ— اِنَّهُمْ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ— یُرِیْدُ اللّٰهُ اَلَّا یَجْعَلَ لَهُمْ حَظًّا فِی الْاٰخِرَةِ ۚ— وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟

3.176. தூதரே! நயவஞ்சகர்கள் மதம்மாறி நிராகரிப்பில் விரைந்துசெல்வது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். அவர்களால் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, அவனுக்குக் கட்டுப்படுவதை விட்டும் தூரமாகி தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர்களைக் கைவிடுவதனூடாக மறுமையின் இன்பங்களில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று அல்லாஹ் விரும்புகிறான். அங்கு நரகத்தில் அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. info
التفاسير:
这业中每段经文的优越:
• ينبغي للمؤمن ألا يلتفت إلى تخويف الشيطان له بأعوانه وأنصاره من الكافرين، فإن الأمر كله لله تعالى.
1. நிராகரிப்பாளர்களான தன் உதவியாளர்களைக் கொண்டு ஷைத்தான் அச்சமூட்டுவதை நம்பிக்கையாளன் சிறிதும் பொருட்படுத்தக்கூடாது. ஏனெனில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. info

• لا ينبغي للعبد أن يغتر بإمهال الله له، بل عليه المبادرة إلى التوبة، ما دام في زمن المهلة قبل فواتها.
2. அல்லாஹ் வழங்கும் அவகாசத்தைக்கொண்டு அடியான் ஏமாந்துவிடக்கூடாது. அந்த அவகாசம் முடிந்துவிடுவதற்குள் உடனே பாவமன்னிப்பின் பக்கம் விரைய வேண்டும். info

• البخيل الذي يمنع فضل الله عليه إنما يضر نفسه بحرمانها المتاجرة مع الله الكريم الوهاب، وتعريضها للعقوبة يوم القيامة.
3. அல்லாஹ் தனக்கு அருளிய அருட்கொடையை கொடுக்காது கஞ்சத்தனம் செய்பவன், தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொள்கிறான். வழங்குபவன், கொடையாளன் அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்யும் பாக்கியத்தை அவன் இழந்து தன்னை மறுமையில் தண்டனைக்கும் ஆளாக்கிக்கொள்கிறான். info