《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
10 : 29

وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِیَ فِی اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ؕ— وَلَىِٕنْ جَآءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَیَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ ؕ— اَوَلَیْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِیْ صُدُوْرِ الْعٰلَمِیْنَ ۟

29.10. மக்களில் சிலர், “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டோம்“ என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டால் அவர்களின் வேதனையை அல்லாஹ்வின் வேதனையைப் போன்று ஆக்கி நிராகரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஈமானை விட்டும் பின்வாங்கி விடுகிறார்கள். -தூதரே!- உமக்கு உம் இறைவனிடமிருந்து ஏதேனும் வெற்றி கிடைத்தால், “நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக நாங்களும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாக இருந்தோம்” என்று கூறுகிறார்கள். மக்களின் உள்ளங்களிலுள்ளவற்றை அல்லாஹ் அறிந்தவனில்லையா? உள்ளங்களிலுள்ள நம்பிக்கை, நிராகரிப்பு எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உள்ளங்களிலுள்ளவற்றை அல்லாஹ்வே அவர்களை விட நன்கறிந்தவனாக இருக்கும் போது, அவற்றில் என்ன உள்ளது என அவர்கள் அல்லாஹ்வுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களா?. info
التفاسير:
这业中每段经文的优越:
• الأعمال الصالحة يُكَفِّر الله بها الذنوب.
1. நற்செயல்களை அல்லாஹ் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆக்குகின்றான். info

• تأكُّد وجوب البر بالأبوين.
2. பெற்றோருடன் நல்ல முறையில் நடந்துகொள்வதன் அவசியத்தை உறுதிசெய்தல். info

• الإيمان بالله يقتضي الصبر على الأذى في سبيله.
3. அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கை அவனுடைய பாதையில் ஏற்படும் துன்பங்களை பொறுமையாக சகித்துக் கொள்வதை வேண்டிநிற்கின்றது info

• من سنَّ سُنَّة سيئة فعليه وزرها ووزر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيء.
4. யார் ஒரு தீய வழிமுறையை அறிமுகப்படுத்துவாரோ அதன் தீமையும் அதன்படி செயற்படுவோரின் தீமையும் அவரையே சாரும். ஆனால் பின்பற்றியோரின் தீமையில் எந்தக் குறையும் ஏற்படாது. info