《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
20 : 25

وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِیْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَیَاْكُلُوْنَ الطَّعَامَ وَیَمْشُوْنَ فِی الْاَسْوَاقِ ؕ— وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ— اَتَصْبِرُوْنَ ۚ— وَكَانَ رَبُّكَ بَصِیْرًا ۟۠

25.20. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்கள் உணவு உண்ணக்கூடியவர்களாகவும் கடைவீதிகளில் உலாவக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். நீர் தூதர்களில் புதுமையானவர் அல்ல. -மனிதர்களே!- செல்வம், வறுமை, ஆரோக்கியம், நோய் போன்ற வேறுபாட்டின் காரணமாக உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். நீங்கள் உங்களின் சோதனையில் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்களா? அல்லாஹ் அதற்காக உங்களுக்குக் கூலி வழங்குவான். பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களையும் கடைப்பிடிக்காதவர்களையும் அவனுக்குக் வழிப்படுபவர்களையும் வழிப்படாதவர்களையும் உம் இறைவன் பார்ப்பவனாக இருக்கின்றான். info
التفاسير:
这业中每段经文的优越:
• الجمع بين الترهيب من عذاب الله والترغيب في ثوابه.
1. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சுதல், அவனுடைய நன்மையில் ஆர்வம்கொள்ளுதல் ஆகிய இரண்டும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. info

• متع الدنيا مُنْسِية لذكر الله.
2. உலக இன்பங்கள் இறைநினைவை மறக்கடித்து விடும். info

• بشرية الرسل نعمة من الله للناس لسهولة التعامل معهم.
3. அல்லாஹ் மனிதர்களை தூதர்களாக அனுப்பியது மனிதர்களுக்கு மிகப் பெரிய அருட்கொடையாகும். மனிதர்களை மனிதர்களால்தான் எளிதில் அணுக முடியும். info

• تفاوت الناس في النعم والنقم اختبار إلهي لعباده.
4. இன்பங்களிலும் துன்பங்களிலும் மனிதர்களுக்கு மத்தியிலுள்ள ஏற்றத்தாழ்வு அடியார்களுக்கான இறைவனின் சோதனையாகும். info