《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

页码:close

external-link copy
33 : 25

وَلَا یَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَقِّ وَاَحْسَنَ تَفْسِیْرًا ۟ؕ

25.33. -தூதரே!- இணைவைப்பாளர்கள் உம்மிடம் எத்தகைய உதாரணத்தை கொண்டுவந்தாலும் நாம் அதற்கு சிறந்த சரியான பதிலையும் சிறந்த விளக்கத்தையும் கொண்டு வருவோம். info
التفاسير:

external-link copy
34 : 25

اَلَّذِیْنَ یُحْشَرُوْنَ عَلٰی وُجُوْهِهِمْ اِلٰی جَهَنَّمَ ۙ— اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِیْلًا ۟۠

25.34. மறுமை நாளில் முகங்குப்புற நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுபவர்கள்தாம் மோசமான இடத்தைப் பெற்றவர்களாவர். ஏனெனில் நிச்சயமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும். மேலும் அவர்கள் சத்தியத்தை விட்டும் மிகத்தூரமான வழியில் உள்ளார்கள். ஏனெனில் அவர்களின் வழி நிராகரிப்பு, வழிகேடு ஆகியவற்றின் வழியாகும். info
التفاسير:

external-link copy
35 : 25

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ

25.35. நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அவருக்கு உதவியாளராக இருக்கும்பொருட்டு அவருடைய சகோதரர் ஹாரூனையும் தூதராக ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
36 : 25

فَقُلْنَا اذْهَبَاۤ اِلَی الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ— فَدَمَّرْنٰهُمْ تَدْمِیْرًا ۟ؕ

25.36. நாம் அவர்கள் இருவரிடமும் கூறினோம்: “நம்முடைய சான்றுகளை பொய்ப்பித்த ஃபிர்அவ்னின் பக்கமும் அவனது சமூகத்தின் பக்கமும் செல்லுங்கள். நம்முடைய கட்டளையைச் செயல்படுத்துங்கள். தூதர்கள் இருவரும் அவர்களிடம் சென்று ஓரிறைக்கொள்கையின் பக்கம் அவர்களை அழைத்தார்கள். அவர்கள் இருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம். info
التفاسير:

external-link copy
37 : 25

وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰیَةً ؕ— وَاَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟ۚۙ

25.37. நூஹின் சமூகம் அவரைப் புறக்கணித்து தூதர்களை பொய்ப்பித்த போது நாம் அவர்களை மூழ்கடித்து அழித்துவிட்டோம். அவர்களை அழித்ததை நாம் அநியாயக்காரர்களை அடியோடு அழிப்பதற்கு ஆற்றலுடையவர்கள் என்பதற்கான சான்றாக ஆக்கினோம். அநியாயக்காரர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தியுள்ளோம். info
التفاسير:

external-link copy
38 : 25

وَّعَادًا وَّثَمُوْدَاۡ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًا بَیْنَ ذٰلِكَ كَثِیْرًا ۟

25.38. நாம் ஹூத் உடைய மக்கள் ஆதையும், ஸாலிஹ் உடைய மக்கள் ஸமூதையும் கிணற்றுவாசிகளையும் அழித்துவிட்டோம். இந்த மூன்று சமூகத்துக்கு மத்தியில் பல சமூகங்களையும் நாம் அழித்துள்ளோம். info
التفاسير:

external-link copy
39 : 25

وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ ؗ— وَكُلًّا تَبَّرْنَا تَتْبِیْرًا ۟

25.39. அழிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக முன்னர் வாழ்ந்த சமூகங்கள் அழிக்கப்பட்டதையும் அதன் காரணங்களையும் நாம் எடுத்துக் கூறினோம். ஒவ்வொரு சமூகத்தையும் அவர்களின் நிராகரிப்பினாலும் பிடிவாதத்தினாலும் அடியோடு அழித்துவிட்டோம். info
التفاسير:

external-link copy
40 : 25

وَلَقَدْ اَتَوْا عَلَی الْقَرْیَةِ الَّتِیْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ؕ— اَفَلَمْ یَكُوْنُوْا یَرَوْنَهَا ۚ— بَلْ كَانُوْا لَا یَرْجُوْنَ نُشُوْرًا ۟

25.40. உம் சமூகத்தைச் சேர்ந்த நிராகரிப்பாளர்கள் -ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும்- போது ஓரினச் சேர்க்கைக்கு தண்டனையாக அவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு கல்மழை பொழிவிக்கப்பட்டு அழிக்கப்பட்ட லூத்தின் சமூகம் வாழ்ந்த ஊரைக் கடந்து செல்கிறார்கள். அவர்கள் அந்த ஊரைப் பார்க்காமல் குருடாகிவிட்டார்களா என்ன? இல்லை, மாறாக அவர்கள் விசாரணை செய்யப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை எதிர்பார்க்காதவர்களாக உள்ளார்கள். info
التفاسير:

external-link copy
41 : 25

وَاِذَا رَاَوْكَ اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ— اَهٰذَا الَّذِیْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا ۟

25.41. -தூதரே!- இந்த நிராகரிப்பாளர்கள் உம்மை சந்தித்தால், “இவரைத்தான் அல்லாஹ் எங்களிடம் தூதராக அனுப்பியுள்ளானா?” என்று கேலியாகவும், மறுத்தவர்களாகவும் கூறி உம்மைப் பரிகாசம் செய்கிறார்கள். info
التفاسير:

external-link copy
42 : 25

اِنْ كَادَ لَیُضِلُّنَا عَنْ اٰلِهَتِنَا لَوْلَاۤ اَنْ صَبَرْنَا عَلَیْهَا ؕ— وَسَوْفَ یَعْلَمُوْنَ حِیْنَ یَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِیْلًا ۟

25.42. நாம் நம்முடைய கடவுள்களை வணங்குவதில் பொறுமையாக இல்லையெனில் அவற்றை விட்டும் இவர் நம்மை தனது ஆதாரங்களால் வழிகெடுத்திருப்பார் என்றும் கூறுகிறார்கள். மண்ணறையிலும் மறுமை நாளிலும் அவர்கள் வேதனையைக் கண்ணால் காணும்போது யார் வழிகெட்டவர்கள் அவர்களா? அல்லது அவரா? என்பதை அறிந்துகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
43 : 25

اَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ ؕ— اَفَاَنْتَ تَكُوْنُ عَلَیْهِ وَكِیْلًا ۟ۙ

25.43. -தூதரே!- தன் மன இச்சையைக் தன் கடவுளாக்கி அதற்கு வழிபடுபவரை நீர் பார்த்தீரா? அவனை நிராகரிப்பை விட்டும் தடுத்து நம்பிக்கையின்பால் திருப்புவதற்கு நீர் அவனுக்குப் பொறுப்பாளரா என்ன? info
التفاسير:
这业中每段经文的优越:
• الكفر بالله والتكذيب بآياته سبب إهلاك الأمم.
1. அல்லாஹ்வையும் நிராகரித்து அவனுடைய சான்றுகளை பொய்ப்பிப்பது சமூகங்கள் அழிக்கப்படுவதற்கான காரணியாகும். info

• غياب الإيمان بالبعث سبب عدم الاتعاظ.
2. மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதை நம்பாமல் இருப்பது அறிவுரை பெறாமைக்கான காரணியாகும். info

• السخرية بأهل الحق شأن الكافرين.
3. சத்தியவாதிகளை பரிகாசம் செய்வது நிராகரிப்பாளர்களின் செயலாகும். info

• خطر اتباع الهوى.
4. மன இச்சையின் பின்பற்றுவதன் விபரீதம். info