《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
36 : 24

فِیْ بُیُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَیُذْكَرَ فِیْهَا اسْمُهٗ ۙ— یُسَبِّحُ لَهٗ فِیْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟ۙ

24.36. இந்த விளக்கு பள்ளிவாயில்களில் எரிக்கப்படுகிறது. அவற்றின் அந்தஸ்தை, கட்டிடத்தை உயர்த்துமாறும் காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தொழுது, தொழுகை, பாங்கு, இறைநினைவு ஆகியவற்றைக் கொண்டு அவனின் பெயரை நினைவுகூருமாறும் அவன் கட்டளையிட்டுள்ளான். info
التفاسير:
这业中每段经文的优越:
• الله عز وجل ضيق أسباب الرق (بالحرب) ووسع أسباب العتق وحض عليه .
1. போரின் மூலம் மாத்திரமே அடிமைப்படுத்த முடியும் என்பதன் மூலம் அல்லாஹ் அடிமைப்படுத்துவதன் காரணிகளை சுருக்கியுள்ளான். அதே வேளை உரிமையிடுவதற்கான காரணிகளை விரிவாக்கி அதனை ஆர்வமூட்டியுமுள்ளான். info

• التخلص من الرِّق عن طريق المكاتبة وإعانة الرقيق بالمال ليعتق حتى لا يشكل الرقيق طبقة مُسْتَرْذَلة تمتهن الفاحشة.
2. அடிமைகள் விபச்சாரத்தைத் தொழிலாக்கி செயற்படும் ஒரு வர்க்கமாக உருவெடுத்து விடக்கூடாது என்பதற்காக ‘முகாதபா’ எனப்படும் பணம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்த முறை மற்றும் உரிமை பெறுவதற்கு பணத்தினால் அடிமைகளுக்கு உதவுதல் போன்ற வழிகளின் மூலம் அடிமைத்துவத்திருந்து வெளிவருதல். info

• قلب المؤمن نَيِّر بنور الفطرة، ونور الهداية الربانية.
3. நம்பிக்கையாளரின் உள்ளம் இயல்பின் ஒளி மற்றும் இறைவழிகாட்டலின் ஒளி ஆகியவற்றால் ஒளிமயமுற்றுள்ளது. info

• المساجد بيوت الله في الأرض أنشأها ليعبد فيها، فيجب إبعادها عن الأقذار الحسية والمعنوية.
4. பள்ளிவாயில்கள் பூமியில் உள்ள இறை இல்லங்களாகும். அவற்றில் அல்லாஹ்வை வணங்கப்பட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே வெளிரங்கமான, மறைமுகமான அசுத்தங்களை விட்டும் அவை பாதுகாக்கப்பட வேண்டும். info

• من أسماء الله الحسنى (النور) وهو يتضمن صفة النور له سبحانه.
5. அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களில் ஒன்றே அந்நூர் என்பதாகும். அது அவனுக்கு ஒளி என்ற பண்பு உள்ளது என்பதை உள்ளடக்கியுள்ளது. info