《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
73 : 2

فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ— كَذٰلِكَ یُحْیِ اللّٰهُ الْمَوْتٰی وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟

2.73. அறுக்குமாறு உத்தரவிடப்பட்ட பசுவின் ஒரு பகுதியைக் கொண்டு கொல்லப்பட்டவரை அடியுங்கள். அல்லாஹ் அவருக்கு உயிர்கொடுத்து, அவர் தன்னைக் கொன்றவரை அறிவிப்பார் என்று நாம் கூறினோம். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். அவர் கொன்றவரை அறிவித்தார். இந்த சடலத்திற்கு அல்லாஹ் உயிரளித்ததுபோன்றே மறுமைநாளில் இறந்தவர்களுக்கும் உயிரளிப்பான். நீங்கள் அறிந்துகொண்டு அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக தனது ஆற்றலுக்கான சான்றுகளை அவன் உங்களுக்குக் காட்டுகின்றான். info
التفاسير:
这业中每段经文的优越:
• أن بعض قلوب العباد أشد قسوة من الحجارة الصلبة؛ فلا تلين لموعظة، ولا تَرِقُّ لذكرى.
1. சில அடியார்களின் உள்ளங்கள் பாறைகளைவிடக் கடினமானது. அவை அறிவுரைகளுக்கு உருகாது; நினைவூட்டலை ஏற்றுக்கொள்ளாது. info

• أن الدلائل والبينات - وإن عظمت - لا تنفع إن لم يكن القلب مستسلمًا خاشعًا لله.
2. அல்லாஹ்வை அஞ்சக்கூடிய, கட்டுப்படக்கூடிய உள்ளமாக இல்லையெனில் சான்றுகள் எவ்வளவுதான் பெரியதாக, தெளிவானதாக இருந்தாலும் அவை எந்தப் பயனையும் அளிக்காது. info

• كشفت الآيات حقيقة ما انطوت عليه أنفس اليهود، حيث توارثوا الرعونة والخداع والتلاعب بالدين.
3. வசனங்கள் யூதர்களின் மனதில் தேங்கியிருக்கும் விஷயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. மடமை, ஏமாற்று, மாா்க்கத்துடன் விளையாடுதல் போன்றவற்றை அவர்கள் அனந்தரமாகப் பெற்றுள்ளனா். info