《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
172 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟

2.172. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, ஆகுமாக்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் நன்றி செலுத்துங்கள். நீங்கள் உண்மையாகவே அவனை மட்டுமே வணங்கி, அவனுக்கு யாரையும் இணையாக்காமல் இருந்தால் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றை விட்டு விலகியிருப்பதும் அவனுக்கு நன்றி செலுத்துவதில் உள்ளவைதாம். info
التفاسير:
这业中每段经文的优越:
• أكثر ضلال الخلق بسبب تعطيل العقل، ومتابعة من سبقهم في ضلالهم، وتقليدهم بغير وعي.
1. அறிவைப் பயன்படுத்தாமல் வழிகேட்டில் தமக்கு முன்னுள்ளவர்களை குருட்டுத்தனமாக பின்பற்றியதனால்தான் பெரும்பாலான மக்கள் வழிதவறினார்கள். info

• عدم انتفاع المرء بما وهبه الله من نعمة العقل والسمع والبصر، يجعله مثل من فقد هذه النعم.
2. அல்லாஹ் வழங்கிய அறிவு, செவிப்புலன், பார்வை போன்ற அருட்கொடைகளைக் கொண்டு பயனடையாதவர்கள் அவற்றைத் இழந்தவர்களைப் போலாவர். info

• من أشد الناس عقوبة يوم القيامة من يكتم العلم الذي أنزله الله، والهدى الذي جاءت به رسله تعالى.
3. மறுமையில் மனிதர்களில் கடுமையான தண்டனைக்கு ஆளாகக்கூடியவர்கள் அல்லாஹ் இறக்கிய கல்வியையும் தூதர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலையும் மறைத்தவர்கள்தாம். info

• من نعمة الله تعالى على عباده المؤمنين أن جعل المحرمات قليلة محدودة، وأما المباحات فكثيرة غير محدودة.
4. தடைசெய்யப்பட்டதை குறைவாகவும் அனுமதிக்கப்பட்டதை அதிகமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளது, தன்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு அவன் வழங்கிய அருட்கொடையாகும். info