《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
96 : 18

اٰتُوْنِیْ زُبَرَ الْحَدِیْدِ ؕ— حَتّٰۤی اِذَا سَاوٰی بَیْنَ الصَّدَفَیْنِ قَالَ انْفُخُوْا ؕ— حَتّٰۤی اِذَا جَعَلَهٗ نَارًا ۙ— قَالَ اٰتُوْنِیْۤ اُفْرِغْ عَلَیْهِ قِطْرًا ۟ؕ

18.96. இரும்புப் பாளங்களைக் கொண்டுவாருங்கள். அவர்கள் அவற்றைக் கொண்டுவந்தார்கள். அவர் அவற்றை இரு மலைகளுக்கிடையே வைத்து கட்டிக்கொண்டேயிருந்தார். இரு மலைகளுக்கு நேராக அக்கட்டிடம் வந்தபோது பணியாளர்களிடம் கூறினார்: “இந்தப் இரும்புப் பாளங்களில் நெருப்பை மூட்டுங்கள். இரும்பு சிவப்பு நிறத்தை அடைந்ததும் “செம்பைக்கொண்டு வாருங்கள். அதனை இதன்மீது ஊற்றுகிறேன்” என்றார். info
التفاسير:
这业中每段经文的优越:
• أن ذا القرنين أحد الملوك المؤمنين الذين ملكوا الدنيا وسيطروا على أهلها، فقد آتاه الله ملكًا واسعًا، ومنحه حكمة وهيبة وعلمًا نافعًا.
1. துல்கர்னைன் உலகை, அதன் மக்களை ஆட்சி செய்த நம்பிக்கைகொண்ட அரசர்களில் ஒருவராக இருந்தார். அல்லாஹ் அவருக்கு பரந்த ஆட்சியதிகாரத்தையும், மதிநுட்பத்தையும், கண்ணியத்தையும், பயனுள்ள கல்வியையும் வழங்கியிருந்தான். info

• من واجب الملك أو الحاكم أن يقوم بحماية الخلق في حفظ ديارهم، وإصلاح ثغورهم من أموالهم.
2. மக்களின் செல்வத்தைக் கொண்டு அவர்களின் வீடுகளைப் பாதுகாப்பதும் குறைகளைச் சீர்செய்வதும் அரசர் அல்லது கவர்னரின் கடமைகளில் ஒன்றாகும். info

• أهل الصلاح والإخلاص يحرصون على إنجاز الأعمال ابتغاء وجه الله.
3. நற்செயலும், உளத்தூய்மையும் உள்ளோர், அல்லாஹ்வின் திருப்திக்காகவே காரியங்களைச் சாதிப்பதில் ஆர்வம் கொள்வார்கள். info