《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
6 : 17

ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَیْهِمْ وَاَمْدَدْنٰكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِیْرًا ۟

17.6. பின்னர் -இஸ்ராயீலின் மக்களே!- நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பிய போது உங்கள் மீது சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உங்களுக்கு ஆட்சியதிகாரத்தை மீண்டும் வழங்கினோம். உங்களின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு பிள்ளைகள் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பின்னரும் உங்களுக்கு செல்வங்களையும் பிள்ளைகளையும் வழங்கி உதவி செய்தோம். உங்களின் எதிரிகளைவிட உங்களைப் பெரும் எண்ணிக்கையினராக ஆக்கினோம். info
التفاسير:
这业中每段经文的优越:
• في قوله: ﴿الْمَسْجِدِ الْأَقْصَا﴾: إشارة لدخوله في حكم الإسلام؛ لأن المسجد موطن عبادةِ المسلمين.
1. (அல்மஸ்ஜிதுல் அக்ஸா) என்ற வார்ததைப் பிரயோகம் அது இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் பள்ளிவாயில்கள் முஸ்லிம்களின் வணங்கும் இடமாகும். info

• بيان فضيلة الشكر، والاقتداء بالشاكرين من الأنبياء والمرسلين.
2. நன்றிசெலுத்தல், நன்றிசெலுத்திய நபிமார்களை, இறைத்தூதர்களைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் சிறப்பு தெளிவாகிறது. info

• من حكمة الله وسُنَّته أن يبعث على المفسدين من يمنعهم من الفساد؛ لتتحقق حكمة الله في الإصلاح.
3. அல்லாஹ்வின் இறைநியதி மற்றும் நோக்கத்தில் உள்ளவைதான், சீர்திருத்தத்தில் தனது நோக்கம் நிறைவேறுவதற்காக குழப்பவாதிகளை அவர்களின் குழப்பத்தை விட்டும் தடுக்கக் கூடியவர்களை அனுப்புகிறான். info

• التحذير لهذه الأمة من العمل بالمعاصي؛ لئلا يصيبهم ما أصاب بني إسرائيل، فسُنَّة الله واحدة لا تتبدل ولا تتحول.
4. இஸ்ராயீலின் மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்று இந்த சமுதாயத்துக்கும் ஏற்படாமலிருக்க பாவங்கள் செய்வதை விட்டும் அவர்களை எச்சரிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் வழிமுறை ஒன்றே. அது மாறுவதில்லை. info