《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
41 : 17

وَلَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِیَذَّكَّرُوْا ؕ— وَمَا یَزِیْدُهُمْ اِلَّا نُفُوْرًا ۟

17.41. மக்கள் படிப்பினை பெற்று, தங்களுக்குப் பயனளிக்கும் விஷயங்களில் ஈடுபட்டு தீங்கிழைக்கும் விஷயங்களை விட்டுவிடுவதற்காக நாம் இந்தக் குர்ஆனிலே சட்டங்களையும் அறிவுரைகளையும் உதாரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இந்நிலையிலும் இயல்பு சிதைந்துவிட்ட அவர்களில் சிலர் அதன் மூலம் சத்தியத்தை விட்டு இன்னுமின்னும் தூரமாகியும், வெறுப்புற்றும் செல்கின்றனர். info
التفاسير:
这业中每段经文的优越:
• الزعم بأن الملائكة بنات الله افتراء كبير، وقول عظيم الإثم عند الله عز وجل.
1. வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்று எண்ணுவது மிகப் பெரும் இட்டுக்கட்டுதலாகும். அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமான வார்த்தையாகும். info

• أكثر الناس لا تزيدهم آيات الله إلا نفورًا؛ لبغضهم للحق ومحبتهم ما كانوا عليه من الباطل.
2. மக்களில் பெரும்பாலோருக்கு அல்லாஹ்வின் வசனங்கள் வெறுப்பையே அதிகப்படுத்துகின்றன. காரணம், அவர்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள், அவர்கள் இருந்துகொண்டிருக்கும் அசத்தியத்தை விரும்புகிறார்கள். info

• ما من مخلوق في السماوات والأرض إلا يسبح بحمد الله تعالى فينبغي للعبد ألا تسبقه المخلوقات بالتسبيح.
3. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் புகழை பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஏனைய படைப்பினங்கள் இறைவனைத் துதிப்பதில் முந்திச்செல்வது அடியானுக்கு அழகல்ல. info

• من حلم الله على عباده أنه لا يعاجلهم بالعقوبة على غفلتهم وسوء صنيعهم، فرحمته سبقت غضبه.
4. அல்லாஹ் தன் அடியார்களின்மீது கொண்ட சகிப்புத்தன்மையின் வெளிப்பாடு, அவர்களது கவனயீனத்திற்காகவும் தீய செயலுக்காகவும் நிச்சயமாக அவன் அவர்களை அவசரமாக தண்டிக்காமையாகும். ஏனெனில் அவனுடைய கருணை அவனது கோபத்தை முந்திவிட்டது. info