《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
7 : 13

وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ— اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ۟۠

13.7. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் -பிடிவாதத்திலும் புறக்கணிப்பிலும் நிலைத்தவர்களாகக்- கூறுகிறார்கள்: “மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பட்டது போன்று முஹம்மது மீதும் அவருடைய இறைவனிடமிருந்து ஒரு சான்று இறக்கப்பட வேண்டாமா?” -தூதரே!- நீர் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மக்களை எச்சரிக்கை செய்யும் ஒரு எச்சரிக்கையாளர்தான். அல்லாஹ் உமக்கு வழங்கிய சான்றுகளைத் தவிர உம்மிடம் எந்த சான்றுகளும் இல்லை. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய ஒரு தூதர் இருக்கின்றார். அதன்படி அவர்களை வழிகாட்டுவார். info
التفاسير:
这业中每段经文的优越:
• عظيم مغفرة الله وحلمه عن خطايا بني آدم، فهم يستكبرون ويَتَحَدَّوْنَ رسله وأنبياءه، ومع هذا يرزقهم ويعافيهم ويحلم عنهم.
1. மனிதர்களின் தவறுகளுக்கான அல்லாஹ்வின் பெரும் மன்னிப்பும் சகிப்புத் தன்மையும் புலப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கர்வம் கொள்வதோடு அவனது தூதர்களுக்கு, நபிமார்களுக்கு சவால் விடுகின்றனர். அவ்வாறிருந்தும் இறைவன் அவர்களுக்கு வாழ்வாதாரமும் ஆரோக்கியமும் அளித்து அவர்களுடன் சகிப்புத் தன்மையுடனே நடந்து கொள்கிறான். info

• سعة علم الله تعالى بما في ظلمة الرحم، فهو يعلم أمر النطفة الواقعة في الرحم، وصَيْرُورتها إلى تخليق ذكر أو أنثى، وصحته واعتلاله، ورزقه وأجله، وشقي أو سعيد، فعلمه بها عام شامل.
2. கருவறையின் இருளில் உள்ளவற்றை அறியுமளவு அல்லாஹ் பரந்த அறிவுடையவன். கருவறையில் உள்ள விந்து, அது ஆணாகவோ பெண்ணாகவோ மாறுவது அதன் ஆரோக்கியம், சுகவீனம், அதன் வாழ்வாதாரம், தவணை, அது சீதேவியா அல்லது மூதேவியா ஆகியவற்றை அவன் அறிந்து வைத்துள்ளான். அது பற்றிய அவனது அறிவு பரந்ததாகும். info

• عظيم عناية الله ببني آدم، وإثبات وجود الملائكة التي تحرسه وتصونه وغيرهم مثل الحَفَظَة.
3. ஆதமுடைய மக்களை அல்லாஹ் சிறந்த முறையில் பராமரிக்கின்றான். அவர்களைக் காவல் காத்து, பாதுகாக்கக்கூடிய, பாதுகாவலர்கள் போன்று வானவர்கள் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. info

• أن الله تعالى يغير حال العبد إلى الأفضل متى ما رأى منه اتباعًا لأسباب الهداية، فهداية التوفيق منوطة باتباع هداية البيان.
4. அல்லாஹ் அடியான் நேர்வழிக்கான காரணிகளை பின்பற்றுவதைக் காணும் போது அவனது நிலையை இன்னும் சிறந்ததாக மாற்றுகிறான். நேர்வழிக்கான உதவி வழிகாட்டலைப் பின்பற்றுவதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. info