《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
54 : 11

اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَرٰىكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْٓءٍ ؕ— قَالَ اِنِّیْۤ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْۤا اَنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟ۙ

11.54,55. எங்களின் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்ததனால் அவற்றுள் சில உம்மைத் தீண்டி பைத்தியமாக்கி விட்டது என்றே நாங்கள் கூறுவோம். ஹூத் கூறினார்: “நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன். நீங்களும் சாட்சி கூறுங்கள், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நான் முற்றிலும் நீங்கி விட்டேன் என்பதற்கு. நீங்களும் என்னைப் பைத்தியமாக்கி விட்டது என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் உங்கள் தெய்வங்களும் சேர்ந்து எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு எந்த அவகாசமும் அளிக்க வேண்டாம். info
التفاسير:
这业中每段经文的优越:
• من وسائل المشركين في التنفير من الرسل الاتهام بخفة العقل والجنون.
1. நபிமார்களை விட்டும் வெறுப்பூட்டுவதற்கான இணைவைப்பாளர்களின் வழிமுறைகளில் ஒன்றே, புத்திக்கோளாறு, பைத்தியம் என்ற குற்றங்களைச் சுமத்துவதாகும். info

• ضعف المشركين في كيدهم وعدائهم، فهم خاضعون لله مقهورون تحت أمره وسلطانه.
2.தமது சூழ்ச்சியிலும் எதிர்ப்பிலும் இணைவைப்பாளர்களின் பலவீனம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள், அவனது கட்டளைக்கும் அதிகாரத்திற்கும் கீழ் அடக்கப்பட்டுள்ளனர். info

• أدلة الربوبية من الخلق والإنشاء مقتضية لتوحيد الألوهية وترك ما سوى الله.
3. படைத்தல், உருவாக்குதல் ஆகிய தெய்வீகத் தன்மைக்கான ஆதாரங்கள், வணக்கத்தில் அல்லாஹ்வை மாத்திரமே ஏகத்துவப்படுத்தி அல்லாஹ்வைத் தவிரவுள்ளவர்களை விட்டுவிட வேண்டும் என்பதை வேண்டி நிற்பனவாகும். info