《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
52 : 11

وَیٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا وَّیَزِدْكُمْ قُوَّةً اِلٰی قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِیْنَ ۟

11.52. என் சமூகமே! அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். பின்னர் உங்கள் பாவங்களை விட்டு விட்டு அவன் பக்கமே திரும்புங்கள். -பாவங்களில் மிகப் பெரியது இணைவைப்பாகும்.- அதற்கு வெகுமதியாக அல்லாஹ் உங்கள் மீது பெரு மழையைப் பொழியச் செய்வான். அதிகமான பிள்ளைகளையும் செல்வங்களையும் வழங்கி உங்களுடைய மதிப்பை மென்மேலும் அதிகரிப்பான். எனது அழைப்பை புறக்கணித்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் எனது அழைப்பைப் புறக்கணித்ததனாலும் அல்லாஹ்வை நீங்கள் நிராகரித்ததனாலும் நான் கொண்டு வந்ததை பொய்ப்பித்ததனாலும் குற்றவாளிகளாகி விடுவீர்கள். info
التفاسير:
这业中每段经文的优越:
• لا يملك الأنبياء الشفاعة لمن كفر بالله حتى لو كانوا أبناءهم.
1. தங்களின் பிள்ளைகளாக இருந்தாலும், அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்காக பரிந்துரை செய்யும் அதிகாரம் இறைத்தூதர்களுக்குக் கூட இல்லை. info

• عفة الداعية وتنزهه عما في أيدي الناس أقرب للقبول منه.
2. அழைப்பாளனின் பக்குவமும் மக்களிடமுள்ளவற்றை விட்டும் ஒதுங்கியிருப்பதும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு நெருக்கமானதாகும். info

• فضل الاستغفار والتوبة، وأنهما سبب إنزال المطر وزيادة الذرية والأموال.
3. பாவமன்னிப்புக் கோருதல் மற்றும் அல்லாஹ்வின்பால் மீளுதலின் சிறப்பு தெளிவாகிறது. அவை மழை பொழிவதற்கும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும்அதிகரிப்பு ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கின்றது. info