《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
116 : 11

فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِیَّةٍ یَّنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِی الْاَرْضِ اِلَّا قَلِیْلًا مِّمَّنْ اَنْجَیْنَا مِنْهُمْ ۚ— وَاتَّبَعَ الَّذِیْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِیْهِ وَكَانُوْا مُجْرِمِیْنَ ۟

11.116. உங்களுக்கு முன்னர் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட சமூகங்களிலுள்ள நல்லவர்கள் தங்களின் சமூகங்களை நிராகரிப்பை விட்டும் பாவங்கள் மூலம் பூமியில் குழப்பம் செய்வதை விட்டும் தடுத்திருக்க வேண்டாமா? அவர்களில் குறைவானவர்களே குழப்பம் செய்வதை விட்டும் மக்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அவர்களது அநியாயக்கார சமூகங்களை நாம் அழித்த போது காப்பாற்றினோம். அவர்களின் சமூகங்களிலுள்ள அநியாயக்காரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடம்பர வாழ்வில் திளைத்திருந்தார்கள். அவர்களது அந்தப் பின்பற்றுதலால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். info
التفاسير:
这业中每段经文的优越:
• وجوب الاستقامة على دين الله تعالى.
1. இறைமார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருப்பது கடமையாகும். info

• التحذير من الركون إلى الكفار الظالمين بمداهنة أو مودة.
2. நிராகரிக்கும் அநியாயக்காரர்களின் பக்கம் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தோ அவர்களுடன் உறவாடியோ சாய்ந்து விடுவதை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. info

• بيان سُنَّة الله تعالى في أن الحسنة تمحو السيئة.
3. நன்மை தீமையை அழித்து விடும் என்ற அல்லாஹ்வின் வழிமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• الحث على إيجاد جماعة من أولي الفضل يأمرون بالمعروف، وينهون عن الفساد والشر، وأنهم عصمة من عذاب الله.
4. நன்மையை ஏவி தீமையை, குழப்பம் செய்வதை தடுக்கும் நல்ல மக்களைக் கொண்ட ஒரு கூட்டத்தை உருவாக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களே அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் பாதுகாப்பு பெறுபவர்கள். info