《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
83 : 10

فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰۤی اِلَّا ذُرِّیَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰی خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهِمْ اَنْ یَّفْتِنَهُمْ ؕ— وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِی الْاَرْضِ ۚ— وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِیْنَ ۟

10.83. அச்சமுதாயம் புறக்கணிப்பதாக தீர்மானித்திருந்தனர். அதனால் மூஸா -தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும்- கொண்டு வந்தும் அவர்கள் அவரை நம்பவில்லை. ஆயினும் இஸ்ராயீலின் மக்களில் சில இளைஞர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டார்கள். அவர்களும் தங்களின் விஷயம் வெளிப்பட்டுவிட்டால் பிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் தங்களை வேதனைக்குட்படுத்தி ஈமானை விட்டும் திசைதிருப்பி விடுவார்களோ என்ற பயத்தில்தான் இருந்தார்கள். நிச்சயமாக பிர்அவ்ன் எகிப்திய மக்களின் மீது அடக்குமுறையாளன். மேலும் அவன் நிராகரிப்பிலும், இஸ்ராயீலின் மக்களைக் கொல்வதிலும் வேதனைக்குட்படுத்துவதிலும் வரம்புமீறுபவன். info
التفاسير:
这业中每段经文的优越:
• الثقة بالله وبنصره والتوكل عليه ينبغي أن تكون من صفات المؤمن القوي.
1. அல்லாஹ்வின் மீதும் அவனது உதவியின் மீதும் நம்பிக்கை வைப்பதும் அவனையே சார்ந்திருப்பதும் உறுதியான நம்பிக்கையாளனின் பண்புகளாக இருக்க வேண்டும். info

• بيان أهمية الدعاء، وأنه من صفات المتوكلين.
2. பிரார்த்தனையின் முக்கியத்துவமும் அது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பவர்களின் பண்பாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• تأكيد أهمية الصلاة ووجوب إقامتها في كل الرسالات السماوية وفي كل الأحوال.
3. அனைத்து நிலமைகளிலும் தொழுகையின் முக்கியத்துவமும், அதனை நிறைவேற்றுவதன் அவசியமும் அனைத்து வானுலக மதங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. info

• مشروعية الدعاء على الظالم.
4. அநியாயக்காரனுக்கு எதிராக பிரார்த்தனை புரிவது அனுமதிக்கப்பட்டதாகும். info