Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Omar Sharif

Numero ng Pahina:close

external-link copy
9 : 8

اِذْ تَسْتَغِیْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّیْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُرْدِفِیْنَ ۟

உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, “தொடர்ந்து வரக்கூடிய ஆயிரம் வானவர்களின் மூலம் நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்” என்று (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான். info
التفاسير:

external-link copy
10 : 8

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ؕ— وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠

ஒரு நற்செய்தியாகவும் உங்கள் உள்ளங்கள் அதன் மூலம் நிம்மதி பெறுவதற்காகவும் தவிர அதை (-அந்த உதவியை) அல்லாஹ் ஆக்கவில்லை. அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير:

external-link copy
11 : 8

اِذْ یُغَشِّیْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَیُنَزِّلُ عَلَیْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَهِّرَكُمْ بِهٖ وَیُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّیْطٰنِ وَلِیَرْبِطَ عَلٰی قُلُوْبِكُمْ وَیُثَبِّتَ بِهِ الْاَقْدَامَ ۟ؕ

(நம்பிக்கையாளர்களே! நீங்கள்) அச்சமற்றிருப்பதற்காக (அல்லாஹ்) தன் புறத்திலிருந்து சிறு தூக்கத்தை உங்கள் மீது போர்த்திய சமயத்தை நினைவு கூருங்கள். உங்களை அதன் மூலம் (-மழையின் மூலம்) அவன் சுத்தப்படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்குவதற்காகவும், உங்கள் உள்ளங்களை அவன் பலப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் (உங்கள்) பாதங்களை அவன் உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) உங்கள் மீது வானத்திலிருந்து மழையை இறக்கினான் (பொழியச் செய்தான்). info
التفاسير:

external-link copy
12 : 8

اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَی الْمَلٰٓىِٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْا ؕ— سَاُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ ۟ؕ

“நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போடுவேன். ஆவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள்; அவர்களின் ஒவ்வொரு கணுவையும் (மூட்டுகளையும்) வெட்டுங்கள்” என்று (நபியே!) உம் இறைவன் வானவர்களுக்கு வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக. info
التفاسير:

external-link copy
13 : 8

ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ— وَمَنْ یُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟

அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் முரண்பட்டனர் என்பதாகும். எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் முரண்படுவாரோ (அவரை அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன். info
التفاسير:

external-link copy
14 : 8

ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِیْنَ عَذَابَ النَّارِ ۟

அது (உங்களுக்கு இவ்வுலக தண்டனையாகும்)! அதை சுவையுங்கள். இன்னும் நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக தண்டனை உண்டு. info
التفاسير:

external-link copy
15 : 8

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ ۟ۚ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களை பெரும் படையாக (போரில்) சந்தித்தால் அவர்களுக்கு (உங்கள்) பின்புறங்களை திருப்பாதீர்கள். (-புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்) info
التفاسير:

external-link copy
16 : 8

وَمَنْ یُّوَلِّهِمْ یَوْمَىِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَیِّزًا اِلٰی فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟

சண்டையிடுவதற்கு ஒதுங்கக் கூடியவராக, அல்லது (தனது) கூட்டத்துடன் சேர்ந்து கொள்பவராக அல்லாமல் எவர் தன் பின்புறத்தை அவர்களுக்கு அந்நாளில் திருப்புவாரோ (-புறமுதுகு காட்டி ஓடுவாரோ) அவர் அல்லாஹ்வின் கோபத்தை சுமந்து கொண்டார். இன்னும், அவருடைய தங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் மிகக் கெட்டதாகும். info
التفاسير: