Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Omar Sharif

Numero ng Pahina:close

external-link copy
6 : 39

خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِیَةَ اَزْوَاجٍ ؕ— یَخْلُقُكُمْ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْ بَعْدِ خَلْقٍ فِیْ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟

அவன் உங்களை ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தான். பிறகு, அதில் இருந்து அதன் ஜோடியை படைத்தான். இன்னும், அவன் உங்களுக்காக கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உருவாக்கினான். அவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றில் (-தாயின் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய) மூன்று இருள்களில் ஒரு படைப்புக்குப் பின்னர் இன்னொரு படைப்பாக படைக்கிறான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆக, நீங்கள் எவ்வாறு (அவனை விட்டு வேறு ஒன்றை வணங்குவதற்காக திசைத்) திருப்பப்படுகிறீர்கள். info
التفاسير:

external-link copy
7 : 39

اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنْكُمْ ۫— وَلَا یَرْضٰی لِعِبَادِهِ الْكُفْرَ ۚ— وَاِنْ تَشْكُرُوْا یَرْضَهُ لَكُمْ ؕ— وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ— ثُمَّ اِلٰی رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் - (எல்லா வகையிலும் அவன்) நிறைவானவன். அவன் தனது அடியார்களுக்கு நிராகரிப்பை விரும்ப மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அவன் உங்களுக்கு அதை விரும்புவான். பாவியான ஓர் ஆன்மா இன்னொரு (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பிறகு, உங்கள் இறைவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
8 : 39

وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِیْبًا اِلَیْهِ ثُمَّ اِذَا خَوَّلَهٗ نِعْمَةً مِّنْهُ نَسِیَ مَا كَانَ یَدْعُوْۤا اِلَیْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلّٰهِ اَنْدَادًا لِّیُضِلَّ عَنْ سَبِیْلِهٖ ؕ— قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِیْلًا ۖۗ— اِنَّكَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۟

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் தன் இறைவனை அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவனாக அழைத்து பிரார்த்திக்கிறான். பிறகு, (இறைவன்) தன் புறத்திலிருந்து அவனுக்கு ஓர் அருளை வழங்கினால் இதற்கு முன்னர் அவனிடம் பிரார்த்திப்பவனாக இருந்ததை அவன் மறந்து விடுகிறான். இன்னும், அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை தெய்வங்)களை ஏற்படுத்துகிறான், அவனுடைய பாதையை விட்டு (மக்களை) வழிகெடுப்பதற்காக (இவ்வாறு செய்கிறான்). (நபியே!) கூறுவீராக! “நீ உனது நிராகரிப்பைக் கொண்டு சிறிது (காலம்) சுகமடைந்துகொள்! நிச்சயமாக நீ நரகவாசிகளில் ஒருவன்தான்.” info
التفاسير:

external-link copy
9 : 39

اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّیْلِ سَاجِدًا وَّقَآىِٕمًا یَّحْذَرُ الْاٰخِرَةَ وَیَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ ؕ— قُلْ هَلْ یَسْتَوِی الَّذِیْنَ یَعْلَمُوْنَ وَالَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ؕ— اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟۠

யார் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை ஆசை வைத்து, இரவு நேரங்களில் சிரம் பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்குவாரோ அவர் அல்லாஹ்வை நிராகரிப்பவருக்கு சமமாவாரா? (நபியே!) கூறுவீராக! “(அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு கீழ்ப்படிவதில் உள்ள நன்மையை) அறிந்தவர்களும் (அதை) அறியாதவர்களும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவதெல்லாம் நிறைவான அறிவுடையவர்கள்தான்.” info
التفاسير:

external-link copy
10 : 39

قُلْ یٰعِبَادِ الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ؕ— لِلَّذِیْنَ اَحْسَنُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةٌ ؕ— وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ؕ— اِنَّمَا یُوَفَّی الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَیْرِ حِسَابٍ ۟

(நபியே நான் என் அடியார்களுக்கு கட்டளையிடுவதாக) கூறுவீராக! “நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மை (-சொர்க்கம்) உண்டு. இன்னும் அல்லாஹ்வின் பூமி விசாலமானதாகும். பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி (மறுமையில்) வழங்கப்படுவதெல்லாம் கணக்கின்றிதான். (முடிவுறாத நற்பாக்கியங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.)” info
التفاسير: