Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

Numero ng Pahina:close

external-link copy
13 : 96

اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ

96.13. நீர் பார்த்தீரா? இவ்வாறு தடுக்கக்கூடியவன் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பித்து புறக்கணித்தாலுமா? அவன் அல்லாஹ்வை அஞ்சவில்லையா? info
التفاسير:

external-link copy
14 : 96

اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ

96.14. தொழுகையை விட்டும் அந்த அடியாரை தடுக்கக்கூடியவன் அவன் செய்யும் செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் அறியவில்லையா? info
التفاسير:

external-link copy
15 : 96

كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬— لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ

96.15. இந்த மூடன் எண்ணுவது போலல்ல விடயம். அவன் நம் அடியாரைத் துன்புறுத்துவதையும் பொய்ப்பிப்பதையும் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் நாம் அவனது நெற்றி முடியை கொடூரமாகப் பிடித்து இழுத்து நரகத்தில் தள்ளிடுவோம். info
التفاسير:

external-link copy
16 : 96

نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ

96.16. அந்த நெற்றி முடி உடையவன் சொல்லில் பொய் சொல்லக்கூடியவன், செயலில் தவறிழைக்கக்கூடியவன். info
التفاسير:

external-link copy
17 : 96

فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ

96.17. அவனது நெற்றிமுடி பிடிக்கப்பட்டு அவன் நரகத்தில் தள்ளப்படும்போது தன்னை வேதனையிலிருந்து காப்பாற்றி உதவி புரிவதற்காக தன் தோழர்களையும் அவையினரையும் அவன் அழைக்கட்டும். info
التفاسير:

external-link copy
18 : 96

سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ

96.18. நாமும் நரகத்தின் காவலர்களான கடுமையான வானவர்களை அழைப்போம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட மாட்டார்கள். தங்களுக்கு இடப்படும் கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள். எனவே இரு பிரிவினரில் யார் பலம்வாய்ந்தவர், சக்தி பெற்றவர் என்பதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். info
التفاسير:

external-link copy
19 : 96

كَلَّا ؕ— لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟

96.19. இந்த அநியாயக்காரன் எண்ணுவது போலல்ல விடயம். அவன் உமக்குத் தீங்கிழைத்துவிட முடியாது. எனவே அவனுக்கு நீர் ஏவலிலும் விலக்கலிலும் கட்டுப்படாதீர். அல்லாஹ்வுக்குச் சிரம்பணிவீராக. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் மூலம் அவனை நெருங்குவீராக. நிச்சயமாக அவனுக்குக் கட்டுப்படுவது அவன் பக்கம் நெருக்கி வைக்கும். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• فضل ليلة القدر على سائر ليالي العام.
1. லைலத்துல் கத்ர் என்னும் இரவு வருடத்தின் அனைத்து இரவுகளையும்விடச் சிறந்ததாகும். info

• الإخلاص في العبادة من شروط قَبولها.
2. அல்லாஹ்வை மட்டுமே உளப்பூர்வமாக வணங்குவது அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும். info

• اتفاق الشرائع في الأصول مَدعاة لقبول الرسالة.
4. அனைத்து மார்க்கங்களும் அடிப்படைகளில் உடன்படுவது தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தூண்டக்கூடியதாகும். info