Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

அல்ஜும்ஆ

Ilan sa mga Layon ng Surah:
الامتنان على الأمة وتفضيلها برسولها، وبيان فضل يوم الجمعة.
இச்சமுதாயத்துக்கு அதன் தூதரின் மூலம் அருள்புரிந்து சிறப்பித்தலும், வெள்ளிக்கிழமை தினத்தின் சிறப்பையும் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 62

یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟

62.1. வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமில்லாத குறைபாடுடைய அனைத்துப் பண்புகளைவிட்டும் அவனை தூய்மைப்படுத்துகின்றன. அவனே ஆட்சி அதிகாரத்தைக்கொண்ட தனித்த ஏக அரசன்; அனைத்துக் குறைபாடுகளை விட்டும் தூய்மையானவன்; யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், சட்டத்திலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• عظم منة النبي صلى الله عليه وسلم على البشرية عامة وعلى العرب خصوصًا، حيث كانوا في جاهلية وضياع.
1. இஸ்லாத்திற்கு முன்னர் அரபுக்கள் அறியாமையிலும் வீணானவற்றிலும் மூழ்கிக் கிடந்தார்கள். info

• الهداية فضل من الله وحده، تطلب منه وتستجلب بطاعته.
2. நபியவர்களின் தூதுத்துவம் மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவருக்கும் பொதுவானது. info

• تكذيب دعوى اليهود أنهم أولياء الله؛ بتحدّيهم أن يتمنوا الموت إن كانوا صادقين في دعواهم لأن الولي يشتاق لحبيبه.
3. “உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்” என்ற சவாலின் மூலம் “தாமே அல்லாஹ்வின் நேசர்கள்” என்ற யூதர்களின் வாதம் பொய்யென நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் நிச்சயமாக நேசன் தனது நேசனை சந்திப்பதை விரும்புவான். info