Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

அல்அன்ஆம்

Ilan sa mga Layon ng Surah:
تقرير عقيدة التوحيد والرد على ضلالات المشركين.
ஏகத்துவக் கொள்கையைத் உறுதிப்படுத்தலும் இணைவைப்பாளர்களின் வழிகேடுகளை மறுத்துரைத்தலும் info

external-link copy
1 : 6

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ ؕ۬— ثُمَّ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟

6.1. முழுமையான பரிபூரணத்தைக் கொண்டு வர்ணிப்பதும், உயர் சிறப்புக்களைக் கொண்டு அன்புடன் கலந்த புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். இரவையும் பகலையும் அடுத்தடுத்து வரக்கூடியதாக படைத்துள்ளான். இரவை இருள் மிக்கதாகவும் பகலை வெளிச்சம்மிக்தாகவும் அவன் ஆக்கியுள்ளான். அவ்வாறிருந்தும் அல்லாஹ்வை நிராகரிப்போர், மற்றவர்களை அவனுக்கு நிகராகவும் இணையாகவும் ஆக்குகிறார்கள்.
info
التفاسير:

external-link copy
2 : 6

هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ طِیْنٍ ثُمَّ قَضٰۤی اَجَلًا ؕ— وَاَجَلٌ مُّسَمًّی عِنْدَهٗ ثُمَّ اَنْتُمْ تَمْتَرُوْنَ ۟

6.2. மனிதர்களே! அவன்தான் - உங்களின் தந்தை ஆதமைப் களி மண்ணிலிருந்து படைத்தபோது - உங்களை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான தவணையை நிர்ணயித்தான். மறுமைநாளில் உங்களை மீண்டும் எழுப்புவதற்காக -அவன் மாத்திரம் அறிந்த- வேறொரு தவணையையும் நிர்ணயித்துள்ளான். பின்னரும் நீங்கள், மறுமை நாளில் மீட்டி எழுப்பும் அவனது வல்லமையைக் குறித்து சந்தேகம் கொள்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
3 : 6

وَهُوَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَفِی الْاَرْضِ ؕ— یَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَیَعْلَمُ مَا تَكْسِبُوْنَ ۟

6.3. வானங்களிலும் பூமியிலும் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான இறைவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் மறைத்து வைத்திருக்கும், வெளிப்படுத்தும் எண்ணங்களையும் சொல்களையும் செயல்களையும் அவன் அறிவான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:

external-link copy
4 : 6

وَمَا تَاْتِیْهِمْ مِّنْ اٰیَةٍ مِّنْ اٰیٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟

6.4. இணைவைப்பாளர்களிடம் - அவர்களின் இறைவனிடமிருந்து - எந்தவொரு சான்றையும், அற்புதத்தையும் நீர் கொண்டுவந்தாலும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாதவர்களாக புறக்கணித்து விடுகிறார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய, தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளும் ஆதாரங்களும் அவர்களிடம் வந்தே இருக்கின்றன. இருந்தும் அவர்கள் அலட்சியமாக அதனைப் புறக்கணித்து விட்டனர். info
التفاسير:

external-link copy
5 : 6

فَقَدْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ ؕ— فَسَوْفَ یَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

6.5. அவர்கள் இந்த தெளிவான சான்றுகளையும் ஆதாரங்களையும் புறக்கணித்தால் - ஏன் இவற்றை விட தெளிவான ஆதாரத்தையே அவர்கள் புறக்கணித்துவிட்டார்களே! முஹம்மது கொண்டுவந்த குர்ஆனை பொய்பித்தார்கள். மறுமைநாளில் வேதனையை அவர்கள் காணும் போது அவர்கள் பரிகாசம் செய்த அவர் கொண்டுவந்ததுதான் சத்தியம் என்பதைக் கண்டுகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
6 : 6

اَلَمْ یَرَوْا كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَیْهِمْ مِّدْرَارًا ۪— وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِیْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِیْنَ ۟

6.6. இந்த நிராகரிப்பாளர்கள் அநியாயக்கார சமூகங்களை அழிப்பதில் அல்லாஹ்வின் வழிமுறையை அறிந்துகொள்ளவில்லையா என்ன? அவர்களுக்கு முன்னர் அவன் பூமியில் எத்தனையோ சமூகங்களை அவன் அழித்துள்ளான். இந்த நிராகரிப்பாளர்களுக்கு வழங்காத பூமியில் நிலைப்பதற்கான ஆற்றல்களை அவர்களுக்கு அவன் வழங்கியிருந்தான். அவர்கள்மீது தொடர் மழையைப் பொழியச் செய்தான். அவர்களின் வசிப்பிடங்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்தான். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தார்கள். அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவன் அவர்களை அழித்துவிட்டான். அவர்களுக்குப் பின் வேறு சமூகங்களை உருவாக்கினான். info
التفاسير:

external-link copy
7 : 6

وَلَوْ نَزَّلْنَا عَلَیْكَ كِتٰبًا فِیْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَیْدِیْهِمْ لَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟

6.7. தூதரே! காகிதங்களில் எழுதப்பட்ட புத்தகத்தை நாம் உம்மீது இறக்கி அதனை அவர்கள் கண்ணால் பார்த்து கைகளால் தொட்டு உறுதிப்படுத்திக் கொண்டாலும் கூட, பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் அவர்கள் அதனை நம்பிக்கைக் கொள்ளமாட்டார்கள். மாறாக “நீர் கொண்டுவந்தது தெளிவான சூனியமே. எனவே நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்றுதான் அவர்கள் கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
8 : 6

وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ مَلَكٌ ؕ— وَلَوْ اَنْزَلْنَا مَلَكًا لَّقُضِیَ الْاَمْرُ ثُمَّ لَا یُنْظَرُوْنَ ۟

6.8. இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் முஹம்மதுடன் ஒரு வானவரை அனுப்பி அவர், இவர் தூதர்தான் என்று எங்களிடம் கூறினால் நாங்கள் நம்பிக்கைகொள்வோம்”. அவர்கள் கூறியவாறு நாம் ஒரு வானவரை அனுப்பி, அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் அவர்களை அழித்துவிடுவோம். வானவர் வந்துவிட்டால் பாவமன்னிப்புக்கான அவகாசம் தரப்படாது. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• شدة عناد الكافرين، وبيان إصرارهم على الكفر على الرغم من قيام الحجة عليهم بالأدلة الحسية.
1. நிராகரிப்பாளர்களின் பிடிவாதம் தீவிரமானது. புலன்களால் புரியமுடியுமான தெளிவான ஆதாரங்களைக் கண்டபின்னரும் அவர்கள் நிராகரிப்பில் உறுதியாக இருக்கின்றனர். info

• التأمل في سنن الله تعالى في السابقين لمعرفة أسباب هلاكهم والحذر منها.
2. கடந்துபோன சமூகங்கள் எந்த காரணத்திற்காக அழிக்கப்பட்டன என்பதை அறிந்து அவற்றிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறைகள் எவ்வாறு இருந்தன என்பதைச் சிந்திக்க வேண்டும். info

• من رحمة الله بعباده أن لم ينزل لهم رسولًا من الملائكة لأنهم لا يمهلون للتوبة إذا نزل.
3. தனது அடியார்களின் மீது அல்லாஹ் கொண்ட அருளின் காரணமாகவே வானவர்களில் ஒருவரை இறைத்தூதராக அனுப்பவில்லை. ஏனெனில் அவ்வாறு வானவர் இறங்கினால் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டார்கள். info