Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

அல்ஹுஜராத்

Ilan sa mga Layon ng Surah:
معالجة اللسان وبيان أثره على إيمان الفرد وأخلاق المجتمع.
நாவைத் திருத்துதலும், தனிமனிதனின் நம்பிக்கை சமூகத்தின் பண்பாடு ஆகியவற்றில் அதன் தாக்கத்தைத் தெளிவுபடுத்தலும் info

external-link copy
1 : 49

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَیْنَ یَدَیِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

49.1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவன் விதித்தவற்றைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்னால் சொல்லாலோ, செயலாலோ முந்தாதீர்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனை விட்டும் தவறாது. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• تشرع الرحمة مع المؤمن، والشدة مع الكافر المحارب.
1. நம்பிக்கையாளர்களுடன் அன்பாகவும் போரிடும் நிராகரிப்பாளர்களுடன் கடுமையாகவும் நடந்துகொள்வதே மார்க்க நிலைப்பாடாகும். info

• التماسك والتعاون من أخلاق أصحابه صلى الله عليه وسلم.
2. ஒற்றுமை, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் நபித்தோழர்களின் பண்புகளாகும். info

• من يجد في قلبه كرهًا للصحابة الكرام يُخْشى عليه من الكفر.
3. யாருடைய உள்ளத்தில் கண்ணியமான நபித்தோழர்களைப் பற்றிய வெறுப்பு இருக்கிறதோ அவரிடம் நிராகரிப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. info

• وجوب التأدب مع رسول الله صلى الله عليه وسلم، ومع سُنَّته، ومع ورثته (العلماء).
4. அல்லாஹ்வின் தூதருடனும் அவரது வழிமுறையான சுன்னாவுடனும் (அறிஞர்களான) அவரது வாரிசுகளுடன் ஒழுக்கமாக நடந்துகொள்வதன் அவசியம். info