Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
40 : 36

لَا الشَّمْسُ یَنْۢبَغِیْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّیْلُ سَابِقُ النَّهَارِ ؕ— وَكُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟

36.40. சூரியன், சந்திரன், இரவு, பகல் ஆகிய சான்றுகள் அல்லாஹ்வின் நிர்ணயத்தைக்கொண்டு முடிவுசெய்யப்பட்டதாகும். அவை தமக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாது. சூரியன், சந்திரனின் பாதையை மாற்ற அல்லது அதன் ஒளியைப் போக்க சந்திரனைப் பிடிக்க முடியாது. இரவு பகலின் நேரம் முடிவடைவதற்கு முன்னரே அதில் நுழைந்து அதனை முந்த முடியாது. வசப்படுத்தப்பட்டுள்ள இந்த படைப்பினங்களுக்கும் ஏனைய கோள்களுக்கும் அல்லாஹ்வின் நிர்ணயத்தினாலும் பாதுகாப்பினாலும் ஏற்படுத்தப்பட்ட பிரத்யேகமான பாதைகள் உள்ளன. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• ما أهون الخلق على الله إذا عصوه، وما أكرمهم عليه إن أطاعوه.
1.மக்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தால் அவனிடம் இழிவுக்குரியோராகவும் அவனுக்கக் கட்டுப்பட்டால் மதிப்பிற்குரியோராகவும் ஆகிவிடுகின்றனர். info

• من الأدلة على البعث إحياء الأرض الهامدة بالنبات الأخضر، وإخراج الحَبِّ منه.
2. வறண்ட பூமி மழையைக் கொண்டு பசுமையான தாவரங்களாலும் அதிலிருந்து தானியங்களை முளைக்கச் செய்வதாலும் உயிர்ப்பிக்கப்படுவது, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரங்களில் உள்ளதாகும். info

• من أدلة التوحيد: خلق المخلوقات في السماء والأرض وتسييرها بقدر.
3. வானிலும் பூமியிலும் படைப்பினங்களைப் படைத்து அவற்றை அளவோடு இயங்கச் செய்வது ஓரிறைக்கொள்கைக்கான ஆதாரங்களில் உள்ளதாகும். info