Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
4 : 33

مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَیْنِ فِیْ جَوْفِهٖ ۚ— وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـِٔیْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ— وَمَا جَعَلَ اَدْعِیَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ— ذٰلِكُمْ قَوْلُكُمْ بِاَفْوَاهِكُمْ ؕ— وَاللّٰهُ یَقُوْلُ الْحَقَّ وَهُوَ یَهْدِی السَّبِیْلَ ۟

33.4. அல்லாஹ் ஒரு மனிதனுக்கு இரு இதயங்களை ஏற்படுத்தாதைப் போல மனைவியரை (திருமணம் முடிக்க) தடைசெய்யப்பட்ட அன்னையரின் இடத்தில் ஆக்கவில்லை. அவ்வாறே உங்களின் வளர்ப்பு மகன்களையும் சொந்த மகன்களாக ஆக்கவில்லை. நிச்சயமாக ழிஹார் -எனப்படும் கணவன் தன் மனைவியை தாய் மற்றும் சகோதரி போன்று தனக்கு ஹராமாக்குதலும்-, வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளையாக்குவதும் இஸ்லாம் தடைசெய்த அறியாமைக் காலத்து வழக்கங்களாகும். அவை உங்கள் வாயினால் அடிக்கடி சொல்லப்படும் வெறும் வார்த்தைகளேயாகும். அவை ஒருபோதும் உண்மையாகிவிடாது. ஏனெனில் மனைவி தாயாகமாட்டாள். வளர்ப்பு மகன் சொந்த மகனாக ஆகமாட்டான். அல்லாஹ் உண்மையே கூறுகிறான், தன் அடியார்கள் அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக. மேலும் அவன் சத்திய பாதையின் பால் வழிகாட்டுகிறான்.
info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• لا أحد أكبر من أن يُؤْمر بالمعروف ويُنْهى عن المنكر.
1. நன்மையை ஏவப்பட்டு தீமையைத் தடுக்கப்பட முடியாதவர் எனக் கூறத்தக்க உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. info

• رفع المؤاخذة بالخطأ عن هذه الأمة.
2. இச்சமுதாயத்தை விட்டும் தவறுக்கு குற்றம்பிடிப்பது நீக்கப்பட்டுள்ளது. info

• وجوب تقديم مراد النبي صلى الله عليه وسلم على مراد الأنفس.
3. மனதின் விருப்பத்தை விட நபியவர்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை வழங்குவது கடமையாகும். info

• بيان علو مكانة أزواج النبي صلى الله عليه وسلم، وحرمة نكاحهنَّ من بعده؛ لأنهن أمهات للمؤمنين.
4.நபயிவர்களின் மனைவிமாரின் உயர்ந்த அந்தஸ்தும் அவருக்குப் பின் அவர்களைத் திருமணம் செய்வது தடை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் இறை விசுவாசிகளின் தாய்மார்களாவர். info