Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
172 : 3

اَلَّذِیْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ ۛؕ— لِلَّذِیْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِیْمٌ ۟ۚ

3.172. அல்லாஹ்வுடைய பாதையில் "ஹம்ராவுல்அஸத்" என்ற போரில் இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டபோது உஹதுப்போரில் காயமுற்றிருந்தும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைக்கு அவர்கள் கட்டுப்பட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் அழைத்தபோது தங்களின் காயங்களைக் காட்டி அவர்கள் பின்தங்கிவிடவில்லை. அவர்களில் சிறந்த முறையில் செயல்பட்டு, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு அவனிடம் சுவனம் என்னும் மகத்தான கூலி காத்திருக்கின்றது. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• من سنن الله تعالى أن يبتلي عباده؛ ليتميز المؤمن الحق من المنافق، وليعلم الصادق من الكاذب.
1. உண்மையான நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக தன் அடியார்களைச் சோதிப்பது அல்லாஹ்வின் வழிமுறைகளில் உள்ளதாகும். info

• عظم منزلة الجهاد والشهادة في سبيل الله وثواب أهله عند الله تعالى حيث ينزلهم الله تعالى بأعلى المنازل.
2. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்பவர்கள், அதில் வீரமரணம் அடைவோர் ஆகியோர் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். info

• فضل الصحابة وبيان علو منزلتهم في الدنيا والآخرة؛ لما بذلوه من أنفسهم وأموالهم في سبيل الله تعالى.
3. நபித்தோழர்கள் தமது உயிரையும் பொருளையும் அல்லாஹ்வின் பாதையில் செலவளித்ததன் காரணமாக இவ்வுலகிலும் மறுமையிலும் அவர்களுக்குச் சிறப்பும் உயர்ந்த அந்தஸ்தும் உண்டு. info