Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
46 : 29

وَلَا تُجَادِلُوْۤا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ ؗ— اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ وَقُوْلُوْۤا اٰمَنَّا بِالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْنَا وَاُنْزِلَ اِلَیْكُمْ وَاِلٰهُنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟

29.46. -நம்பிக்கையாளர்களே!- வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் அறிவுரை மற்றும் தெளிவான ஆதாரங்களைக்கொண்டு அவர்களை அழைத்தல், உரையாடல் ஆகிய அழகிய முறையில் அன்றி விவாதம் செய்யாதீர்கள். ஆயினும் அவர்களில் பிடிவாதம் கொண்டு அநீதியிழைத்து உங்களுக்கு எதிராக போரை அறிவித்தவர்களைத்தவிர. அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை அல்லது இழிவடைந்து தங்களின் கைகளால் ஜிஸ்யா வரி கட்டும்வரை அவர்களுடன் போரிடுங்கள். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் கூறுங்கள்: “அல்லாஹ் எங்கள் மீது இறக்கிய குர்ஆனின் மீதும், உங்கள் மீது இறக்கிய தவ்ராத் மற்றும் இன்ஜீலின் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். எங்களின் இறைவனும் உங்களின் இறைவனும் ஒருவன்தான். அவனை வணங்குவதிலும் அவனது இறைவல்லமையிலும் பூரணத்தன்மையிலும் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நாங்கள் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாகவும் அடிபணிந்தவர்களாகவும் இருக்கின்றோம். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• مجادلة أهل الكتاب تكون بالتي هي أحسن.
1. வேதக்காரர்களுடன் அழகிய முறையில் விவாதம் புரியவேண்டும். info

• الإيمان بجميع الرسل والكتب دون تفريق شرط لصحة الإيمان.
2. தூதர்கள் அனைவரின் மீதும், அவர்கள் கொண்டுவந்த வேதங்கள் அனைத்தின் மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்வது ஈமான் செல்லுபடியாவதற்கான ஒரு நிபந்தனையாகும். info

• القرآن الكريم الآية الخالدة والحجة الدائمة على صدق النبي صلى الله عليه وسلم.
3. புனித குர்ஆன் நபியவர்களின் உண்மைத் தன்மைக்கான நிரந்தரமான சான்றாகும். info