Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
40 : 27

قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ— فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۫— لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ— وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟

27.40. எதைக்கொண்டு பிரார்த்தித்தால் அவன் அங்கீகரிப்பானோ அத்தகைய அல்லாஹ்வின் மகத்தான திருநாமத்தை உள்ளடக்கிய வேத அறிவைப் பெற்றிருந்த, கற்றறிந்த நல்ல மனிதர் ஒருவர், “நான் நீங்கள் கண் இமைப்பதற்குள் நான் அதனைக் கொண்டு வந்துவிடுவேன். அல்லாஹ்விடம் நான் பிரார்த்திப்பதன் மூலம் அவன் அதனைக் கொண்டுவந்துவிடுவான் என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். அவளது அரியணை தமக்கு முன்னால் நிலைபெற்று இருப்பதைக் கண்ட சுலைமான் கூறினார்: “இது என் இறைவனின் அருளாகும். இதன் மூலம் நான் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துகிறேனா அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறேனா என்று அவன் சோதிக்கிறான். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர் நிச்சயமாக அதன் பயனைத் தானே பெறுகிறார். அல்லாஹ் தேவையற்றவன். அடியார்கள் நன்றிசெலுத்துவதால் அவனுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. யார் அல்லாஹ்வின் அருள்களை மறுத்து அதற்காக அவனுக்கு நன்றி செலுத்தவில்லையோ நிச்சயமாக என் இறைவன் அடியார்களின் நன்றியைவிட்டும் தேவையற்றவன், கொடையாளன். தனது அருள்களை மறுப்பவனுக்கு அவன் அருள்புரிவதும் அவனது கொடைத்தன்மையே. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• عزة الإيمان تحصّن المؤمن من التأثر بحطام الدنيا.
1. ஈமானிய கண்ணியம் நம்பிக்கையாளனை உலகின் அற்பப் பொருட்களால் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது. info

• الفرح بالماديات والركون إليها صفة من صفات الكفار.
2. உலகியல் வசதிகளைக்கொண்டு மகிழ்ந்து, அதன் பக்கம் சாய்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info

• يقظة شعور المؤمن تجاه نعم الله.
3. அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு முன்னால் நம்பிக்கையாளனின் உணர்வு விழிப்பாக இருக்கும். info

• اختبار ذكاء الخصم بغية التعامل معه بما يناسبه.
4. எதிரியின் விவேகத்திற்கு ஏற்ப அவனைக் கையாளும் எண்ணத்தில் அவனது விவேகத்தைச் சோதித்தல். info

• إبراز التفوق على الخصم للتأثير فيه.
5. எதிரியின் மீது தாக்கம் செலுத்துவதற்காக அவனை விட மேன்மையை வெளிப்படுத்தல். info