Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
4 : 25

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اِفْكُ ١فْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَیْهِ قَوْمٌ اٰخَرُوْنَ ۛۚ— فَقَدْ جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۟ۚۛ

25.4. அல்லாஹ்வையும் தூதரையும் நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்: “இந்த குர்ஆனை முஹம்மது சுயமாகப் புனைந்துகொண்டு அதனை அபாண்டமாக அல்லாஹ்வின்பால் இணைத்துவிட்டார். இதனைப் புனைவதற்கு வேறு சில மனிதர்களும் அவருக்கு உதவியிருக்கிறார்கள்.” இந்த நிராகரிப்பாளர்கள் அபாண்டமாக இட்டுக் கட்டுகிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கே அன்றி வேறில்லை. மனிதர்கள் மற்றும் ஜின்களால் இதைப்போன்று ஒருபோதும் கொண்டுவர முடியாது. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• اتصاف الإله الحق بالخلق والنفع والإماتة والإحياء، وعجز الأصنام عن كل ذلك.
1. உண்மையான இறைவன் படைத்தல், பலனளித்தல், மரணிக்கச் செய்தல், உயிர்ப்பித்தல் ஆகிய பண்புகளையுடையவன், சிலைகள் இவற்றில் எதையும் செய்ய சக்தி பெறாது. info

• إثبات صفتي المغفرة والرحمة لله.
2. மன்னித்தல், கருணைகாட்டுதல் ஆகிய இரு பண்புகள் அல்லாஹ்வுக்கு உள்ளன என்பது உறுதியாகிறது. info

• الرسالة لا تستلزم انتفاء البشرية عن الرسول.
3. தூதுப் பணிக்கு தூதரை விட்டும் மனிதத் தன்மைகள் நீங்க வேண்டுமென்பது அவசியமல்ல. info

• تواضع النبي صلى الله عليه وسلم حيث يعيش كما يعيش الناس.
4. மனிதர்களைப் போன்று வாழும் நபியவர்களின் பணிவு. info