Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
18 : 25

قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ یَنْۢبَغِیْ لَنَاۤ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِیَآءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَآءَهُمْ حَتّٰی نَسُوا الذِّكْرَ ۚ— وَكَانُوْا قَوْمًا بُوْرًا ۟

25.18. வணங்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ பரிசுத்தமானவன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னைத் தவிர வேறு இறைநேசர்களை பாதுகாவலர்களை ஏற்படுத்திக்கொள்வது எங்களுக்கு உகந்ததல்ல. நாங்கள் எவ்வாறு உன்னைவிடுத்து எங்களை வணங்குமாறு உன் அடியார்களை அழைத்திருப்போம்? ஆயினும் எங்கள் இறைவா! நீ இந்த இணைவைப்பாளர்களையும் இவர்களின் முன்னோர்களையும் படிப்படியாக தண்டிக்கும்பொருட்டு உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்தாய். அதனால் அவர்கள் உன்னை மறந்துவிட்டார்கள். உன்னுடன் மற்றவர்களையும் வணங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் துர்பாக்கியத்தினால் அவர்கள் அழிவுக்குரிய சமூகமாக இருந்தார்கள்.” info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• الجمع بين الترهيب من عذاب الله والترغيب في ثوابه.
1. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சுதல், அவனுடைய நன்மையில் ஆர்வம்கொள்ளுதல் ஆகிய இரண்டும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. info

• متع الدنيا مُنْسِية لذكر الله.
2. உலக இன்பங்கள் இறைநினைவை மறக்கடித்து விடும். info

• بشرية الرسل نعمة من الله للناس لسهولة التعامل معهم.
3. அல்லாஹ் மனிதர்களை தூதர்களாக அனுப்பியது மனிதர்களுக்கு மிகப் பெரிய அருட்கொடையாகும். மனிதர்களை மனிதர்களால்தான் எளிதில் அணுக முடியும். info

• تفاوت الناس في النعم والنقم اختبار إلهي لعباده.
4. இன்பங்களிலும் துன்பங்களிலும் மனிதர்களுக்கு மத்தியிலுள்ள ஏற்றத்தாழ்வு அடியார்களுக்கான இறைவனின் சோதனையாகும். info