Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
31 : 17

وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْیَةَ اِمْلَاقٍ ؕ— نَحْنُ نَرْزُقُهُمْ وَاِیَّاكُمْ ؕ— اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِیْرًا ۟

17.31. உங்கள் பிள்ளைகளுக்கு செலவளிப்பதனால் எதிர்காலத்தில் வறுமை ஏற்படுமோ என அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்குவதற்கு நாமே பொறுப்பேற்றுள்ளோம். ஒரு பாவமும் செய்யாத, கொல்வதற்குரிய காரணம் எதுவும் இல்லாத அவர்களைக் கொல்வது பெரும் பாவமாக இருக்கின்றது. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• الأدب الرفيع هو رد ذوي القربى بلطف، ووعدهم وعدًا جميلًا بالصلة عند اليسر، والاعتذار إليهم بما هو مقبول.
1. உறவினர்கள் உதவிகேட்டு மறுக்கும் சூழ்நிலைவந்தால் மென்மையான முறையில் நடந்துகொண்டு வசதி வாய்ப்பு வரும்போது உதவுவதாக அழகிய முறையில் வாக்குறுதியளித்தல், ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் உதவ முடியாததன் காரணத்தைத் தெளிவுபடுத்தல் என்பன உயர் ஒழுக்கங்களாகும். info

• الله أرحم بالأولاد من والديهم؛ فنهى الوالدين أن يقتلوا أولادهم خوفًا من الفقر والإملاق وتكفل برزق الجميع.
2. தாய், தந்தையரைவிட பிள்ளைகளுடன் அல்லாஹ்வே அதிக கருணையாளனாவான். எனவேதான் வறுமைக்குப் பயந்து அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கொல்வதை அவன் தடுத்து, அனைவருக்கும் வாழ்வாதாரம் அளிக்கும் பொறுப்பையும் அவனே ஏற்றுக் கொண்டுள்ளான். info

• في الآيات دليل على أن الحق في القتل للولي، فلا يُقْتَص إلا بإذنه، وإن عفا سقط القصاص.
3. கொலை செய்யப்பட்டதற்குப் பதிலாக பழிதீர்க்கும் உரிமை கொலை செய்யப்பட்டவரின் பொறுப்பாளருக்குரியதாகும். அவரது அனுமதி இன்றி கொலையாளி கொலை செய்யப்பட முடியாது. அவர் மன்னித்து விட்டால் கொலைத் தண்டனை ரத்தாகிவிடும். info

• من لطف الله ورحمته باليتيم أن أمر أولياءه بحفظه وحفظ ماله وإصلاحه وتنميته حتى يبلغ أشده.
4. அநாதையின் மீது அல்லாஹ் வைத்துள்ள கருணையினால் அவன் பக்குவம் அடையும் வரை அவனையும் அவனது சொத்துக்களையும் பாதுகாக்குமாறும் அதன் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறும் அவனது பொறுப்பாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளான். info