Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
78 : 12

قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَیْخًا كَبِیْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗ ۚ— اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟

12.78. யூஸுஃபின் சகோதரர்கள் யூஸுஃபிடம் கூறினார்கள்: “அரசரே! அவருக்கு அவரை மிகவும் நேசிக்கும் தள்ளாத வயதிலுள்ள தந்தை இருக்கிறார். அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை பிடித்துக் கொள்ளுங்கள். எங்களுடனும், மற்றவர்களுடனும் நீர் சிறந்த முறையிலேயே நடந்து கொள்பவராகவே நிச்சயமாக நாம் காண்கிறோம். எனவே அவ்வாறு செய்து எங்களுக்கு நன்மை செய்யுங்கள்.” info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• جواز الحيلة التي يُتَوصَّل بها لإحقاق الحق، بشرط عدم الإضرار بالغير.
1. சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக தந்திரம் செய்யலாம். ஆனால் அதன் மூலம் மற்றவர்களுக்குத் தீங்கு நேரக் கூடாது. info

• يجوز لصاحب الضالة أو الحاجة الضائعة رصد جُعْل «مكافأة» مع تعيين قدره وصفته لمن عاونه على ردها.
2. ஒரு பொருளைத் தொலைத்தவர் அல்லது தன்னால் செய்ய முடியாத தேவையுடையவர் அதை நிறைவேற்றி தருபவருக்குப் குறிப்பிட்ட அளவு நிர்ணயித்து அதன் வடிவத்தை கூறி பரிசு அறிவிக்கலாம். info

• التغافل عن الأذى والإسرار به في النفس من محاسن الأخلاق.
3. நோவினையை வெளிக்காட்டாது அதனை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொள்வது நற்குணத்தில் உள்ளதாகும். info