Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
74 : 10

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهٖ رُسُلًا اِلٰی قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ— كَذٰلِكَ نَطْبَعُ عَلٰی قُلُوْبِ الْمُعْتَدِیْنَ ۟

10.74. நூஹுக்கு சில காலத்திற்குப் பிறகு பல தூதர்களை அவர்களது சமூகங்களின்பால் அனுப்பினோம். தூதர்கள் தங்களின் சமூகங்களிடம் சான்றுகளையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் தூதர்களை நிராகரிப்பதில் முன்பு உறுதியாக இருந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை கொள்ளும் எண்ணம் இருக்கவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். முந்தைய தூதர்களை நிராகரித்த அந்த மக்கள் மீது முத்திரையிட்டது போன்றே எல்லா கால கட்டங்களிலும் இடங்களிலும் நிராகரிப்பின் மூலம் இறைவரம்பை மீறக்கூடிய நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களின் மீதும் முத்திரையிட்டு விடுகின்றோம். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• سلاح المؤمن في مواجهة أعدائه هو التوكل على الله.
1. நம்பிக்கையாளன் தன் எதிரிகளை எதிர்கொள்வதற்கான ஆயுதம் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருப்பதேயாகும். info

• الإصرار على الكفر والتكذيب بالرسل يوجب الختم على القلوب فلا تؤمن أبدًا.
2. நிராகரிப்பிலும் தூதர்களை மறுப்பதிலும் தொடர்ந்து நிலைத்திருப்பதனால், எப்பொழுதுமே நம்பிக்கை கொள்ள முடியாதவாறு, உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விடும். info

• حال أعداء الرسل واحد، فهم دائما يصفون الهدى بالسحر أو الكذب.
3. தூதர்களின் எதிரிகளுடைய நிலை ஒன்றே. அவர்கள் எப்பொழுதும் நேர்வழியை சூனியம் அல்லது பொய் என்பதாகவே வர்ணிப்பார்கள். info

• إن الساحر لا يفلح أبدًا.
4. நிச்சயமாக சூனியக்காரன் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டான். info