Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Abdul Hameed Baqavi

மர்யம்

external-link copy
1 : 19

كٓهٰیٰعٓصٓ ۟

1. காஃப் ஹா யா ஐன் ஸாத். info
التفاسير:

external-link copy
2 : 19

ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ

2. (நபியே!) உமது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை (இங்கு) நினைவு கூர்வீராக. info
التفاسير:

external-link copy
3 : 19

اِذْ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ۟

3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது, info
التفاسير:

external-link copy
4 : 19

قَالَ رَبِّ اِنِّیْ وَهَنَ الْعَظْمُ مِنِّیْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَیْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآىِٕكَ رَبِّ شَقِیًّا ۟

4. ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்.) info
التفاسير:

external-link copy
5 : 19

وَاِنِّیْ خِفْتُ الْمَوَالِیَ مِنْ وَّرَآءِیْ وَكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا فَهَبْ لِیْ مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۟ۙ

5. நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு! info
التفاسير:

external-link copy
6 : 19

یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۗ— وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟

6. அவன் எனக்கும், யஅகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக் கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை'' என்று பிரார்த்தித்தார். info
التفاسير:

external-link copy
7 : 19

یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ ١سْمُهٗ یَحْیٰی ۙ— لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟

7. (அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்.) info
التفاسير:

external-link copy
8 : 19

قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِیًّا ۟

8. அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
9 : 19

قَالَ كَذٰلِكَ ۚ— قَالَ رَبُّكَ هُوَ عَلَیَّ هَیِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَیْـًٔا ۟

9. அதற்கவன் ‘‘(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அ(வ்வாறு செய்வ)து எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாமல் இருந்த சமயத்தில் நானே உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவனே கூறுகிறான்'' என்றும் கூறினான். info
التفاسير:

external-link copy
10 : 19

قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ— قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَیَالٍ سَوِیًّا ۟

10. அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான். info
التفاسير:

external-link copy
11 : 19

فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰۤی اِلَیْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِیًّا ۟

11. பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார். info
التفاسير: