Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Abdul Hameed Baqavi

இப்ராஹீம்

external-link copy
1 : 14

الٓرٰ ۫— كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— بِاِذْنِ رَبِّهِمْ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ

1. அலிஃப் லாம் றா. (நபியே! இது) வேத நூல். இதை நாமே உம்மீது இறக்கியிருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வருவீராக! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும். info
التفاسير:

external-link copy
2 : 14

اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَوَیْلٌ لِّلْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ شَدِیْدِ ۟ۙ

2. அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே! ஆகவே, (இதை) நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெரும்கேடுதான். info
التفاسير:

external-link copy
3 : 14

١لَّذِیْنَ یَسْتَحِبُّوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ— اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟

3. இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாததுடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) தடுத்துக்கொண்டு அதில் கோணலையும் உண்டுபண்ணுகின்றனர். இவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
4 : 14

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِیُبَیِّنَ لَهُمْ ؕ— فَیُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

4. (நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
5 : 14

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— وَذَكِّرْهُمْ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟

5. நிச்சயமாக நாம் மூஸாவை நம் பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து “நீங்கள் உமது மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவீராக. அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக'' (என்று அவருக்குக் கட்டளையிட்டோம்.) (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. info
التفاسير: