పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - ఉమర్ షరీఫ్

పేజీ నెంబరు:close

external-link copy
74 : 6

وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚ— اِنِّیْۤ اَرٰىكَ وَقَوْمَكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

இப்ராஹீம் தன் தந்தை ஆஸருக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! “நீர் சிலைகளை வணங்கத்தகுதியான தெய்வங்களாக எடுத்துக்கொள்கிறீரா?’’ “நிச்சயமாக நான் உம்மையும் உம் சமுதாயத்தையும் தெளிவான வழிகேட்டில் காண்கிறேன்.’’ info
التفاسير:

external-link copy
75 : 6

وَكَذٰلِكَ نُرِیْۤ اِبْرٰهِیْمَ مَلَكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِیَكُوْنَ مِنَ الْمُوْقِنِیْنَ ۟

இன்னும், (நேர்வழியையும் வழிகேட்டையும் அவருக்கு நாம் காண்பித்து கொடுத்த) இவ்வாறுதான், வானங்கள்; மற்றும், பூமியின் பேராட்சியை இப்ராஹீமுக்கு காண்பித்தோம். ஏனெனில், (அவர் அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து கொள்வதற்காக.) இன்னும், அவர் உறுதியான நம்பிக்கை உடையவர்களில் ஆகுவதற்காக. info
التفاسير:

external-link copy
76 : 6

فَلَمَّا جَنَّ عَلَیْهِ الَّیْلُ رَاٰ كَوْكَبًا ۚ— قَالَ هٰذَا رَبِّیْ ۚ— فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الْاٰفِلِیْنَ ۟

ஆக, அவரை இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இது என் இறைவன்’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது, “மறையக் கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள நான்) விரும்பமாட்டேன்’’ எனக் கூறினார். info
التفاسير:

external-link copy
77 : 6

فَلَمَّا رَاَ الْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّیْ ۚ— فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَىِٕنْ لَّمْ یَهْدِنِیْ رَبِّیْ لَاَكُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآلِّیْنَ ۟

ஆக, உதயமாகிய சந்திரனை அவர் கண்டபோது, “இது என் இறைவன்’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது “என்(னைப் படைத்த எனது உண்மையான) இறைவன் என்னை நேர்வழி படுத்தாவிட்டால் வழிகெட்ட சமுதாயத்தில் நிச்சயமாக நான் ஆகிவிடுவேன்’’ எனக் கூறினார். info
التفاسير:

external-link copy
78 : 6

فَلَمَّا رَاَ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّیْ هٰذَاۤ اَكْبَرُ ۚ— فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ یٰقَوْمِ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟

ஆக, உதயமாகிய சூரியனைக் கண்டபோது, “இது என் இறைவன், இது மிகப் பெரியது’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது, “என் சமுதாயமே! நீங்கள் (உண்மையான இறைவனாகிய அல்லாஹ்விற்கு) இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்’’ என்று கூறினார். info
التفاسير:

external-link copy
79 : 6

اِنِّیْ وَجَّهْتُ وَجْهِیَ لِلَّذِیْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِیْفًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ

“வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் நிச்சயமாக நான் ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடையவனாக (அல்லாஹ்வின் பக்கம்) என் முகத்தை திருப்பிவிட்டேன். இன்னும், நான் இணைவைப்பவர்களில் இல்லை.’’ (என்று கூறினார்) info
التفاسير:

external-link copy
80 : 6

وَحَآجَّهٗ قَوْمُهٗ ؕ— قَالَ اَتُحَآجُّوْٓنِّیْ فِی اللّٰهِ وَقَدْ هَدٰىنِ ؕ— وَلَاۤ اَخَافُ مَا تُشْرِكُوْنَ بِهٖۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ رَبِّیْ شَیْـًٔا ؕ— وَسِعَ رَبِّیْ كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ— اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟

இன்னும், அவரிடம் அவருடைய சமுதாயத்தினர் தர்க்கித்தனர். அவர் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி என்னிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனோ எனக்கு நேர்வழி காட்டிவிட்டான். இன்னும், அவனுக்கு நீங்கள் இணைவைப்பதை நான் பயப்பட மாட்டேன், என் இறைவன் எதையும் நாடினால் தவிர. என் இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும் விட விசாலமானவனாக இருக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?’’ info
التفاسير:

external-link copy
81 : 6

وَكَیْفَ اَخَافُ مَاۤ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ عَلَیْكُمْ سُلْطٰنًا ؕ— فَاَیُّ الْفَرِیْقَیْنِ اَحَقُّ بِالْاَمْنِ ۚ— اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟ۘ

“இன்னும், நீங்கள் இணைவைத்தவற்றை எவ்வாறு நான் பயப்படுவேன். உங்களுக்கு அவன் எதற்கு ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விற்கு இணையாக்கியதைப் பற்றி நீங்கள் பயப்படுவதில்லை. ஆகவே, இரு பிரிவினரில் (இறைவனின் கோபத்திலிருந்து) பாதுகாப்புப்பெற மிகத் தகுதியுடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (பதில் கூறுங்கள்).” info
التفاسير: