పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - ఉమర్ షరీఫ్

external-link copy
60 : 2

وَاِذِ اسْتَسْقٰی مُوْسٰی لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ؕ— فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ— قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ— كُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟

இன்னும், மூஸா தனது சமுதாயத்திற்குத் தண்ணீர் தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீர் உம் தடியால் கல்லை அடிப்பீராக!” எனக் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. மக்கள் எல்லாம் தங்களது நீர் அருந்தும் பகுதியை திட்டமாக அறிந்தார்கள். அல்லாஹ் கொடுத்த உணவிலிருந்து புசியுங்கள்! பருகுங்கள். இன்னும், (பூமியில்) விஷமம் (கலகம், குழப்பம், பாவம்) செய்தவர்களாக இருந்த நிலையில் பூமியில் எல்லை மீறி விஷமம் செய்யாதீர்கள். info
التفاسير: