పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం

పేజీ నెంబరు:close

external-link copy
26 : 40

وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِیْۤ اَقْتُلْ مُوْسٰی وَلْیَدْعُ رَبَّهٗ ۚؕ— اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّبَدِّلَ دِیْنَكُمْ اَوْ اَنْ یُّظْهِرَ فِی الْاَرْضِ الْفَسَادَ ۟

40.26. ஃபிர்அவ்ன் கூறினான்: “என்னை விட்டுவிடுங்கள், நான் மூஸாவுக்குத் தண்டனையாக அவரைக் கொன்றுவிடுகிறேன். அவர் என்னைத் தடுப்பதற்காக தன் இறைவனை அழைக்கட்டும். தனது இறைவனை அவர் அழைப்பதை நான்பொருட்படுத்தமாட்டேன். நிச்சயமாக அவர் நீங்கள் இருந்துகொண்டிருக்கும் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது கொலை, அழித்தல் ஆகியவற்றால் பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நான் அஞ்சுகிறேன்.” info
التفاسير:

external-link copy
27 : 40

وَقَالَ مُوْسٰۤی اِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا یُؤْمِنُ بِیَوْمِ الْحِسَابِ ۟۠

40.27. ஃபிர்அவ்னின் மிரட்டலை அறிந்த போது மூஸா அவரிடம் கூறினார்: “சத்தியத்தின் மீது நம்பிக்கைகொள்ளாமல், மறுமைநாளின் மீதும் அங்கு நடைபெறும் விசாரணை, தண்டனையின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்ளும் ஒவ்வொருவனை விட்டும் என் இறைவனாகவும் உங்கள் இறைவனாகவும் இருப்பவனிடம் ஒதுங்கி அவனின்பால் நான் பாதுகாவல் தேடுகிறேன்.” info
التفاسير:

external-link copy
28 : 40

وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ۖۗ— مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَكْتُمُ اِیْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ یَّقُوْلَ رَبِّیَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَیِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ— وَاِنْ یَّكُ كَاذِبًا فَعَلَیْهِ كَذِبُهٗ ۚ— وَاِنْ یَّكُ صَادِقًا یُّصِبْكُمْ بَعْضُ الَّذِیْ یَعِدُكُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ ۟

40.28. ஃபிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த தன் சமூகத்தை விட்டும் நம்பிக்கைகொண்டதை மறைத்து வைத்திருந்த நம்பிக்கையாளர் ஒருவர் தன் சமூகம் மூஸாவை கொலை செய்ய உறுதிபூண்டதை நிராகரித்து கூறினார்: “எந்தக் குற்றமும் செய்யாத இந்த மனிதரை “என் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக கொல்லப்போகிறீர்களா? நிச்சயமாக அவர், தான் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட உண்மையான தூதர் என்பதை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் உங்களிடம் கொண்டுவந்தும் உள்ளார். ஒருவேளை அவர் பொய்யராக இருந்தால் அதனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரித்த வேதனைகளில் சில விரைவாக உங்களை வந்தடையலாம். நிச்சயமாக அல்லாஹ், தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களுக்கும், அவன்மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் புனைந்துகூறுவோருக்கும் சத்தியத்தின்பால் பாக்கியமளிக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
29 : 40

یٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْیَوْمَ ظٰهِرِیْنَ فِی الْاَرْضِ ؗ— فَمَنْ یَّنْصُرُنَا مِنْ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ— قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِیْكُمْ اِلَّا مَاۤ اَرٰی وَمَاۤ اَهْدِیْكُمْ اِلَّا سَبِیْلَ الرَّشَادِ ۟

40.29. என் சமூகமே! இன்றைய தினம் எகிப்தில் நீங்கள் மேலோங்கியவர்களாக ஆட்சியுடன் இருக்கிறீர்கள். மூஸாவைக் கொலை செய்வதன் காரணமாக ஏற்படும் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எமக்கு யார் உதவ முடியும்?” ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் சொல்வதே சட்டம். எனது முடிவே முடிவு, குழப்பத்தையும் தீங்கையும் தடுக்கும் பொருட்டு மூஸாவைக் கொல்வதற்கு முடிவெடுத்துவிட்டேன். நான் உங்களுக்கு நேரான வழியைத்தான் காட்டுகிறேன்.” info
التفاسير:

external-link copy
30 : 40

وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ مِّثْلَ یَوْمِ الْاَحْزَابِ ۟ۙ

40.30. அந்த நம்பிக்கையாளர் தம் சமூகத்தின் நலம் நாடியவராகக் கூறினார்: “நிச்சயமாக -நீங்கள் மூஸாவை அநியாயமாக, விரோதமாக கொன்றுவிட்டால்- முந்தைய தூதர்களுக்கு எதிராக அணிதிரண்ட அந்த மக்களுக்கு ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். info
التفاسير:

external-link copy
31 : 40

مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ؕ— وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ۟

40.31. நூஹின் சமூகம், ஆத், ஸமூத் சமூகங்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களில் நிராகரித்து தூதர்களை மறுத்து பொய்ப்பித்தவர்களுக்கு ஏற்பட்ட வழமையை போன்று. அவர்களுக்கு பின்வந்தவர்களிலும் நிராகரிப்பினாலும் தூதர்களை பொய்ப்பித்ததினாலும் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அவன் அடியார்களின் மீது அநீதி இழைக்க விரும்பமாட்டான். நிச்சயமாக உரிய கூலியை வழங்கும் விதமாக அவர்கள் செய்த பாவங்களின் காரணமாகத்தான் அவன் அவர்களைத் தண்டிக்கிறான். info
التفاسير:

external-link copy
32 : 40

وَیٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ یَوْمَ التَّنَادِ ۟ۙ

40.32. என் சமூகமே! நிச்சயமாக நான் உங்கள் மீது மறுமையை அஞ்சுகிறேன். அந்த நாளில் உறவின் அடிப்படையிலோ, பதவியின் அடிப்படையிலோ மக்கள் ஒருவரையொருவர் அழைப்பார்கள், அந்த பயங்கர நிலமையில் இந்த வழிமுறை அவர்களுக்குப் பயனளிக்கும் என்ற எண்ணத்தில். info
التفاسير:

external-link copy
33 : 40

یَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِیْنَ ۚ— مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟

40.33. அந்த நாளில் நீங்கள் நரகத்தைவிட்டும் பயத்தால் விரண்டோடுவீர்கள். அப்போது அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைப் தடுக்கக்கூடியவர் யாரும் இருக்கமாட்டார். யாரை அல்லாஹ் கைவிட்டு நம்பிக்கை கொள்வதற்கு பாக்கியமளிக்கமாட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் நேர்வழிக்கு பாக்கியமளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. info
التفاسير:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• لجوء المؤمن إلى ربه ليحميه من كيد أعدائه.
1. எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள நம்பிக்கையாளன் அல்லாஹ்விடம் தஞ்சமடைகிறான். info

• جواز كتم الإيمان للمصلحة الراجحة أو لدرء المفسدة.
2. கூடுதல் நன்மையை கருத்தில் கொண்டு அல்லது தீங்கிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக ஈமானை மறைத்துக் கொள்வதற்கு அனுமதி உண்டு. info

• تقديم النصح للناس من صفات أهل الإيمان.
3. மக்களுக்கு அறிவுரை வழங்குவது நம்பிக்கையாளர்களின் பண்புகளில் உள்ளதாகும். info