పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం

external-link copy
73 : 33

لِّیُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ وَیَتُوْبَ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠

33.73. அல்லாஹ் ஏற்படுத்திய விதிப்படி மனிதன் அவற்றை ஏற்றுக்கொண்டான். இது நயவஞ்சம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்களின் நயவஞ்சகத்தின் காரணமாகவும் இணைவைக்கும் ஆண்களையும் பெண்களையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக அல்லாஹ் தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றியதனால் மன்னிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• اختصاص الله بعلم الساعة.
1. மறுமை நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மாத்திரமே உள்ளது. info

• تحميل الأتباع كُبَرَاءَهُم مسؤوليةَ إضلالهم لا يعفيهم هم من المسؤولية.
2. பின்பற்றியவர்கள் தமது வழிகேட்டுக்கான பொறுப்பைத் தமது தலைவர்களின் மீது சுமத்துவது அவர்களைப் பொறுப்பிலிருந்து விடுவிக்காது. info

• شدة التحريم لإيذاء الأنبياء بالقول أو الفعل.
3. சொல்லாலோ, செயலாலோ நபிமார்களுக்குத் தொல்லையளிப்பது முற்றிலும் தடையாகும். info

• عظم الأمانة التي تحمّلها الإنسان.
4. மனிதன் சுமந்துள்ள அமானிதம் பெரியது (மகத்தானது). info