పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అబ్దుల్ హమీద్ బఖవీ

పేజీ నెంబరు:close

external-link copy
138 : 7

وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰی قَوْمٍ یَّعْكُفُوْنَ عَلٰۤی اَصْنَامٍ لَّهُمْ ۚ— قَالُوْا یٰمُوْسَی اجْعَلْ لَّنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ— قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟

138. நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
139 : 7

اِنَّ هٰۤؤُلَآءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِیْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

139. (அந்த சிலைவணங்கிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘நிச்சயமாக இந்த மக்கள் இருக்கின்ற மார்க்கம் அழிந்துவிடக்கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு ஒரு பலனையும் அளிக்காது'' என்றும் கூறினார்.) info
التفاسير:

external-link copy
140 : 7

قَالَ اَغَیْرَ اللّٰهِ اَبْغِیْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟

140. (தவிர) ‘‘அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கிவைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்'' என்றும் அவர் கூறினார். info
التفاسير:

external-link copy
141 : 7

وَاِذْ اَنْجَیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ— یُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠

141. (இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது. info
التفاسير:

external-link copy
142 : 7

وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ— وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟

142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி ‘‘நீர் எனது மக்களிடையே என் இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துவீராக. மேலும், விஷமிகளுடைய வழியை நீர் பின்பற்றாதீர்'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
143 : 7

وَلَمَّا جَآءَ مُوْسٰی لِمِیْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ— قَالَ رَبِّ اَرِنِیْۤ اَنْظُرْ اِلَیْكَ ؕ— قَالَ لَنْ تَرٰىنِیْ وَلٰكِنِ انْظُرْ اِلَی الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِیْ ۚ— فَلَمَّا تَجَلّٰی رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰی صَعِقًا ۚ— فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَیْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِیْنَ ۟

143. நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்த பொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகிறேன்.) நீ உன்னை எனக்கு காண்பி'' என்று கூறினார். (அதற்கு இறைவன் ‘‘நேர்முகமாக) என்னைக் காண உம்மால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீர் நோக்குவீராக. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீர் என்னைக் காண்பீர்'' என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவு பெறவே (இறைவனை நோக்கி) ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்'' என்று கூறினார். info
التفاسير: