அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப்

external-link copy
107 : 9

وَالَّذِیْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِیْقًا بَیْنَ الْمُؤْمِنِیْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ ؕ— وَلَیَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰی ؕ— وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟

இன்னும், கெடுதல் செய்வதற்காகவும்; நிராகரிப்பிற்காகவும்; நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதற்காகவும்; இதற்கு முன்னர் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர் பார்த்திருப்பதற்காகவும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக் கொண்டவர்களும் (மதீனாவிலும் மதீனாவை சுற்றிலும்) இருக்கிறார்கள். இன்னும், “நாங்கள் நன்மையைத் தவிர (கெட்டதை) நாடவில்லை” என்று நிச்சயமாக சத்தியம் அவர்கள் செய்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். info
التفاسير: