அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப்

பக்க எண்:close

external-link copy
17 : 38

اِصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَیْدِ ۚ— اِنَّهٗۤ اَوَّابٌ ۟

(நபியே!) அவர்கள் கூறுவதை சகிப்பீராக! (அல்லாஹ்வின் விஷயத்தில், அல்லாஹ்வை வணங்குவதில்) மிக வலிமை, உறுதி உடைய நமது அடியார் தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (அல்லாஹ்வை அதிகம் வணங்குவதன் மூலம் அவன் பக்கம்) முற்றிலும் திரும்பக் கூடியவர் ஆவார். info
التفاسير:

external-link copy
18 : 38

اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ یُسَبِّحْنَ بِالْعَشِیِّ وَالْاِشْرَاقِ ۟ۙ

நிச்சயமாக நாம் (அவருக்கு) மலைகளை வசப்படுத்தினோம். அவருடன் மாலையிலும் காலையிலும் அவை (அல்லாஹ்வை) துதிக்கும். info
التفاسير:

external-link copy
19 : 38

وَالطَّیْرَ مَحْشُوْرَةً ؕ— كُلٌّ لَّهٗۤ اَوَّابٌ ۟

இன்னும் (அவருக்கு முன்பாக) ஒன்று சேர்க்கப்பட்ட பறவைகளையும் (அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவை எல்லாம் அவருக்கு கீழ்ப்படிந்தவையாக இருந்தன. (எல்லாம் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வை துதிப்பவையாக இருந்தன.) info
التفاسير:

external-link copy
20 : 38

وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَیْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ ۟

இன்னும், அவருடைய ஆட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும் (-நபித்துவத்தையும் சட்ட நுணுக்கத்தையும்) மிகத்தெளிவான, மிக உறுதியான பேச்சையும் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
21 : 38

وَهَلْ اَتٰىكَ نَبَؤُا الْخَصْمِ ۘ— اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ ۟ۙ

(நபியே) வழக்காளிகளுடைய செய்தி உம்மிடம் வந்ததா? (தாவூத், அல்லாஹ்வை வணங்கி வந்த) வீட்டின் முன்பக்கமாக அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக! info
التفاسير:

external-link copy
22 : 38

اِذْ دَخَلُوْا عَلٰی دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوْا لَا تَخَفْ ۚ— خَصْمٰنِ بَغٰی بَعْضُنَا عَلٰی بَعْضٍ فَاحْكُمْ بَیْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰی سَوَآءِ الصِّرَاطِ ۟

அவர்கள் தாவூத் (நபி) இடம் (திடீரென) நுழைந்த போது அவர் அவர்களைப் பார்த்து திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: பயப்படாதீர். நாங்கள் இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர், (மற்ற) ஒருவர் மீது அநியாயம் செய்தார். ஆகவே! எங்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர். நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவீராக! info
التفاسير:

external-link copy
23 : 38

اِنَّ هٰذَاۤ اَخِیْ ۫— لَهٗ تِسْعٌ وَّتِسْعُوْنَ نَعْجَةً وَّلِیَ نَعْجَةٌ وَّاحِدَةٌ ۫— فَقَالَ اَكْفِلْنِیْهَا وَعَزَّنِیْ فِی الْخِطَابِ ۟

“நிச்சயமாக இவர் எனது சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கு ஒரே ஓர் ஆடுதான் உள்ளது. அதை(யும்) எனக்கு தந்துவிடு! என்று அவர் கூறுகிறார். அவர் வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.” info
التفاسير:

external-link copy
24 : 38

قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰی نِعَاجِهٖ ؕ— وَاِنَّ كَثِیْرًا مِّنَ الْخُلَطَآءِ لَیَبْغِیْ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیْلٌ مَّا هُمْ ؕ— وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۟

(தாவூத்) கூறினார்: உனது ஆட்டை தனது ஆடுகளுடன் சேர்க்க அவர் (உன்னிடம்) கேட்டதினால் அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார். நிச்சயமாக பங்காளிகளில் அதிகமானவர்கள் - அவர்களில் சிலர், சிலர் மீது அநீதி இழைக்கிறார்கள். (ஆனால்,) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களைத் தவிர. அவர்கள் மிகக் குறைவானவர்களே! தாவூத், நாம் அவரை சோதித்தோம் என்பதை அறிந்து கொண்டார். ஆகவே, அவர் தன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். சிரம் பணிந்தவராக (பூமியில்) விழுந்தார். அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார். info
التفاسير:

external-link copy
25 : 38

فَغَفَرْنَا لَهٗ ذٰلِكَ ؕ— وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰی وَحُسْنَ مَاٰبٍ ۟

ஆக, நாம் அவருக்கு அ(ந்த குற்றத்)தை மன்னித்தருளினோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடம் மிக நெருக்கமும் அழகிய மீளுமிடமும் உண்டு. info
التفاسير:

external-link copy
26 : 38

یٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِیْفَةً فِی الْاَرْضِ فَاحْكُمْ بَیْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰی فَیُضِلَّكَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— اِنَّ الَّذِیْنَ یَضِلُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌۢ بِمَا نَسُوْا یَوْمَ الْحِسَابِ ۟۠

தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை இந்த பூமியில் அதிபராக ஆக்கினோம். ஆகவே, மக்களுக்கு மத்தியில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! சுய விருப்பத்தை பின்பற்றிவிடாதீர். அது உம்மை அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து வழிகெடுத்துவிடும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து (மக்களை) வழிகெடுப்பார்களோ - அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, அவர்கள் விசாரணை நாளை மறந்த காரணத்தால். info
التفاسير: